'கடை பரோட்டோ எப்படி இவ்வளவு சாஃப்ட்டா இருக்கிறது... டி.வி.யில் காட்டும் சப்பாத்தி எப்படி தவாவில் அழகா 'புஸ்' என பூரி மாதிரி உப்புகிறது' எனப் பலருக்கும் கேள்வி உண்டு. பரோட்டா மென்மையாகவும் விசிறிப் போட வசதியாகவும், தவாவில் போடும் சப்பாத்தி, உப்பி வருவதற்கும் கோதுமையில் இயல்பாக இருக்கும் குளூட்டனைவிடக் கூடுதல் 'குளூட்டன்' கோதுமை மாவில் சேர்க்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. குளூட்டன் பலருக்கும் ஒவ்வாமை தரக்கூடியது. அது மூலநோய், குடல் புண், 'இரிடபிள் பவல் சிண்ட்ரோம்' எனும் குடல் நோய் முதல் குடல் புற்று வரை உருவாக்கக்கூடியது.
-- மருத்துவர் கு.சிவராமன். ( 'ஆறாம் திணை' தொடரில் )
-- ஆனந்த விகடன். 22-01-2014.
No comments:
Post a Comment