Wednesday, May 31, 2017

சோடசோபசாரம்.

உபசாரம்  பதினாறு.
     ஆலயங்களில்  இறைவனுக்கு சோடசோபசாரம் என்னும்  உபசாரம்,  பதினாறு  விதமாகச்  செய்யப்படுகின்றன.
     தவிசு  அளித்தல்,  கைகழுவ  நீர்  தருதல்,  கால்  கழுவ  நீர்  தருதல்,  மூக்குடி  நீர்  தருதல்,  நீராட்டல்,  ஆடைசாத்தல்,  முப்புரி  நூல்  தருதல்,  தேய்வைபூசல்,  மலர்சாத்தல்,  மஞ்சள்  அரிசி  தூவுதல்,  நறும்புகை  காட்டல்,  விளக்கிடல்,  கற்பூரம்  ஏற்றல்,  அமுதம்  ஏந்தல்,  அடைக்காய்தருதல்,  மந்திரமலரால்  அர்ச்சித்தல்  முதலியன.
திருவலஞ்சுழி  விநாயகர்
     திருவலஞ்சுழியிலுள்ள  விநாயகர்  கடல்  நுரையால்  செய்யப்பட்டவரதலால்  அவருக்கு  பச்சைக்கற்பூரம்  தூவுவதைத்  தவிர  வேறு  அபிஷேகம்  கிடையாது.
திருநாகேஸ்வரம்
     திருநாகேஸ்வரம்  கோயிலில்  சுயம்பு  வடிவிலுள்ள  பார்வதி,  சரஸ்வதி,  லட்சுமி  மூவருக்கும்  டைலக்  காப்பு  மட்டுமே
சாத்தப்படுகிறது.                                                            
-- ( பக்தி  துணுக்குகள் )
-- தினமலர் பக்திமலர்.  15-1- 2015. 

Tuesday, May 30, 2017

புதுமையான போப்!

  "உலம்  முழுவதும்  தீவிரவாதம்  உள்பட  பல்வேறு  பிரச்னைகள்  நிலவுகின்றன.  இந்த  பிரச்னைகளைத்  தீர்க்க,  நம்  ஒவ்வொருவருக்கும்  நேர்மையும்  அரவணைத்துச்  செல்லும்  குணமும்  தேவைப்படுகிறது."  என்று  கிறிஸ்துமஸ்  வாழ்த்தில்  சொன்ன  போப்  பிரான்ஸிஸ்  குடும்ப  ஒற்றுமைக்காகவும்  ஒரு  அமைப்பையே  ஏற்படுத்தியுள்ளார்.  இவர்  இதுவரை  இருந்த  போப்புகளிலேயே  பல  புதுமைகளைச்  செய்தவர்.
      குறிப்பாக,  ஐரோப்பிய  நாடுகளைச்  சேர்ந்தவர்களே  போப்  ஆகத்  தேர்ந்தெடுக்கும்  வழக்கத்திலிருந்து  முதல்  முறையாக  ஒரு  இலத்தீன்  அமெரிக்கரான  பிரான்ஸிஸ்  தேர்ந்தெடுக்கப்பட்டர்.  ஒரு  இயேசு  சபையைச்  சேர்ந்த  துறவி  போப்  ஆகத்  தேர்ந்தெடுக்கப்பட்டதும்,  போப்கள்  வழக்கமாக  வைத்துக்  கொள்ளும்  பெயர்களில்  அல்லாமல்,  தன்  வாழ்நாள்  முழுவதும்  எளிமையை  நேசித்தவரும்  ஏழைமையை  சுவாசித்தவருமான  பிராஸிஸ்  அரசியாரின்  பெயரை  வைத்துக்கொண்டதும்  இவரின்  சிறப்பு.
      இவர்  பேராயராகப்  பதவி  ஏற்ற  பின்னரும்  ஆயர்கள்  வாழும்  ஆடம்பர  பங்களாக்களில்  தங்க  மறுத்து  அடுக்கு  மாடியில்  தங்கி  உதவிக்கு  ஒரு  வயதான  துறவியை  மட்டும்  வைத்துக்கொண்டு  தானே  சமைத்து  உண்டார்.  ஆடம்பர  மகிழுந்துகளில்  பயணிப்பதைத்  தவிர்த்து  மக்கள்  போகும்  பேருந்துகளிலும்,  இருசக்கர  வாகங்களிலும்  பயணம்  செய்து  அனைவரையும்  ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார்.  போப்  ஆன  பின்னரும்  அரண்மனை  போன்ற  வசதிகளைத்  தவிர்த்து  தான்  முன்னால்  தங்கிய  பழைய  விடுதி  அறையிலேயே  தங்கினார்.
     வழக்கமான  போப்கள்  அணியும்  ஆடம்பர  அங்கி,  சிவப்புக்  காலணி,  சிவப்புத்  தொப்பியைத்  தவிர்த்து  எளிய  அங்கியும்  வெள்ளை  நிற  தொப்பியையும்  அணிந்துகொண்டார்.எல்லாவற்றுக்கும்  மேலாக  வத்திக்கான்  வங்கியைத்  தணிக்கைக்கு  உட்படுத்தி  ஆடம்பரச்  செலவுசெய்யும்  ஆயர்களைத்  தட்டிக்கேட்டார்.  இந்தச்  செயல்பாட்டால்  மக்கள்  உள்ளங்கவர்ந்த  போப்  ஆக  பிரான்ஸிஸ்  இருக்கிறார்.
-- மி.அந்தோணிதாஸ்,  முடிச்சூர்.  ( வாசகர்  வாய்ஸ் )  அனுபவம்  புதுமை.
-- கல்கி.  11, ஜனவரி  2015.
--  இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன்.     

Monday, May 29, 2017

சுள்ளிகள் போதும்!

மொபைலை  சார்ஜ்  பண்ண  சுள்ளிகள்  போதும்!
     வெறும்  சுள்ளிகளால்  நெருப்பை  மூட்டி  அதன்  மூலம்  மொபைலை  சார்ஜ்  ஏற்றவும்,  தேநீர்  தயாரிக்கவும்  உதவும்  வகையில்  பயோலைட் ( Bio Lite ) கேம்ப்ஸ்டவ்  ஒன்று  தற்போது  கிடைக்கிறது.  இந்த  ஸ்டவ்வில்  இரண்டு  அறைகள்  உள்ளன.  ஓர்  அறையில்  சுள்ளிகளைப்போட்டு  எரிக்கலாம்.  அந்த  அறையின்  மீது  பாத்திரத்தை  வைத்துச்  சூடேற்றலாம்.  ஒரு  லிட்டர்  தண்ணீரை  நான்கைந்து  நிமிடங்களில்  கொதிக்க  வைக்கலாம்.  ஆகவே,  தேவையான  தேநீரைத்  தயாரித்துக்கொள்ளலாம்.    அடுத்த  அறையில்  வெப்ப  ஆற்றலை  மின்  ஆற்றலாக  மாற்ற  வசதி  செய்யப்பட்டுள்ளது.  இதன்  மூலம்  கிடைக்கும்  மின்சாரத்தை  மொபைலுக்கு  சார்ஜ்  ஏற்றப்  பயன்படுத்த  வாகாக  பிளக்  பாயிண்ட்  தரப்பட்டுள்ளது.  5  வோல்ட்  மின்சாரத்தை  இது  உற்பத்தி  செய்யும்.  மொபைலை  சார்ஜ்  ஏற்றிக்கொள்ள  இது  போதும்.  இதன்  விலை  சுமார்  130  அமெரிக்க  டாலர்.
     இந்த  ஸ்டவ்வை  மிக  எளிதாக  எங்கும்  எடுத்துச்  சென்று  பயன்படுத்த  இயலும்.  பயன்படுத்தி  முடித்த  பின்னர்,  சுள்ளிகளால்  ஏற்பட்ட  சாம்பலை  சிறிய  குழி  தோண்டி  கொட்டி  தண்ணீரை  ஊற்றித்  தணலை  அணைத்துவிட்டால்  போதும்.  மண்ணோடு  மண்ணாக  மட்கிவிடும்.  சுற்றுச்  சூழலுக்கு  எந்தக்  கேடும்  விளைவிக்காது.
--ராகு  .( சந்தைக்குப்  புதுசு.).
-- 'தி இந்து'  நாளிதழ்.    

Sunday, May 28, 2017

தமிழ்மொழி

  தமிழ்மொழி  தோன்றியது  பற்றிப்  பெரியோர்  கூறியுள்ள  செய்தி  ஒன்று  உண்டு.  சிவபெருமானின்  ( டமருகம் )  உடுக்கையிலிருந்து  இருபுறமும்  வெளிவந்த  ஒலியே  சமஸ்கிருதமும்,  தமிழும்  என்பது  அது.  ஒருபுறத்திலிருந்து  வந்த  ஒலி  தமிழ்.  மறு  புறத்தது  சமஸ்கிருதம்.  இதை  ஏற்றுக்  கொள்வதும்  மறுப்பதும்  அவரவர்  உளப்பாங்கைப்  பொறுத்தது.
-- புலவர்  பாரத  சி.வி.சேஷாத்ரி.
விபூதி
     சைவர்கள்  விபுதி  அணிகிறார்கள்.  நெற்றி  நிறையப்  பூசுவதோடு   உடம்பெல்லாமும்  பூசுகிறார்கள்.  இந்த  முறைக்கு  உத்தூளனம்  என்று  பெயர்.  அதையே  தண்ணீரில்  குழைத்து  உச்சி,  நெற்றி,  மார்பு,  உந்தி,  முழங்கால்,  விலாக்கள்,  தோள்,  முழங்கை,  மணிக்கட்டு  ஆகிய  இடங்களில்  மூன்று  விரல்களால்  இடுவதற்குத்  தீட்சை  பெற்றிருக்க  வேண்டும்.  சிவபெருமானுடைய  திருநாங்களாக  ஆசானம்,  தத்புருஷம்,  அகோரம்,  வாமதேவம்,  ஸ்த்டோஜாதம்  என்ற  ஐந்தையும்  நம;  என்ற  கோடி  சேர்த்து  அணிவது  வழக்கம்.
     போருக்குப்  போகிற  வீரன்  புறப்படுவதற்கு  முன்  தன்  தலையில்  ஹெல்மெட் (  தலைக்கவசம் )  அணிகிறான்.  Wiser ( நெற்றியில் )  Breast- plate,  Abdominal  guard,  Thigh  Pad,  Knee  pad,  Elbow  guard  என்பது  போல  அணுந்து  கொண்டு  புறப்படுகிறான்.  எதற்கு?  எதிரியின்  அம்பும்  வாளும்  தாக்காமல்  இருப்பதற்காக.  விபூதிக்கு  இதனால்  கவசம்  என்று  பேர்  வந்தது.
     ஒரு  காலத்தில்  வைணவர்களும்  திருநீற்றைத்தான்  அணிந்திருந்தார்கள்.  பகவத்  இராமானுஜர்தான்  திருமண்  இடும்  முறையை  அறிமுகப்படுத்தினார்.  ஆண்டுக்கு  ஒரு  நாள்  திருக்கண்ணமங்கையில்  ஒரு  முகூர்த்த  காலம்  பெருமாள்  திருமண்  காப்புக்குப்  பதிலாக  விபூதி  அணிகிறார்  என்று  சொன்னால்  உங்களுக்கு  வியப்பாக  இருக்கும்.  இந்தத்  தலம்  திருவாரூர்--  நாகப்பட்டினம்  இடையில்  இருக்கிறது.
-- டாக்டர்  நா. மகாலிங்கம்.
--அமுதசுரபி.  தீபாவளி  சிற்ப்பிதழ். 67ம்  ஆண்டு மலர்.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

Saturday, May 27, 2017

பொங்கலின் நாயகன்

*   சூரியனின்  நிறம்  என்ன?  --  வெள்ளை.  நமக்கு  அது  மஞ்சள்  போலத்  தோன்றுவதன்  காரணம்  பூமியின்  வளிமண்டலம்.
     சூரியக்  கதிரைப்  பலவிதமாக  சிதறடித்து  அனுப்புவதால்தான்.
*   கருவுற்ற  பெண்கள்  சூரிய  கிரகணத்தின்போது  வெளியில்  வரக்கூடாது  என்று கூறப்படுவதற்கு  காலகாலமாக  கூறப்படும்
     காரணம்  எது ?  --  பிறக்கும்  குழந்தைகளின்  உதடுகள்  கோணலாக  மடிந்திருக்கும் ( cleft  lips ).
*   இந்துமதப்  புராணங்களின்படி  சூரியவம்சத்தைச்  சேர்ந்த  மன்னன்  யார்?  --  மனு.  பகீரதன், இஷ்வாகு,  தசரதன்  ஆகிய
     நால்வருமே  சூரியவம்சத்தைச்  சேர்ந்தவர்கள்தான்.
*   எந்த  மாநிலத்தில்  சூரியனுகான  தனிப்பட்ட  ஆலயம்  இல்லை?  --  நான்கு  மாநிலங்களில்  சூரியனுக்கான  தனிப்பட்ட
    கோயில்கள்  உள்ளன.  தமிழ்நாட்டில்  சூரியனார்  ஆலயம்  கும்பகோணம்  அருகில்  உள்ளது.  குஜராத்தில்  மொதோராவிலும்,
    பீஹாரில்  கயாவிலும்,  ஒடிஸாவில்  கொனாரக்கிலும்  உள்ளன.
*   சூரியக்  கதிர்கள்  சராசரியாக  எவ்வளவு  நேரத்தில்  பூமியை  அடைகிறது?  --  8  நிமிடங்கள்.  மேலும்  துல்லியமாகச்
    சொல்வதென்றால்  8.3  நிமிடங்கள்.
*   மகாபாரதத்தில்  சூரியனின்  மகனான  கர்ணனின்  வளர்ப்புத்  தாய்  யார்?  --  தேரோட்டியான அதிரதனின்  மனைவியின்
    பெயர்  ராதா.  இவள்தான்  கர்ணனின்  வளர்ப்புத்  தாய்.  இதன்  காரணமாகத்தான்  கர்ணன்  ராதேயன்  என்றும்
    அழைக்கப்படுகிறான்.      
*   ஜெய,  விஜய,  அஜய,  ஜிதப்ராணா,  ஜிதாக்ரமா,  மனோஜயா,  ஜிதக்ரோதா  இவை  யார்  அல்லது  எவை ?  --  இவை
    குதிரைகள்.  பவிஷ்ய  புராணத்தின்படி  சூரியன்  செல்லும்  வாகனத்தில்  பூட்டப்பட்ட  ஏழு  குதிரைகளின்  பெயர்கள்  இவை.
    சூரியக்  கதிர்களை  இவை  குறியீடாகக்  கொண்டவை  என்பதுண்டு.
-- ஜி.எஸ். எஸ்.  வெற்றிக்கொடி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  செவ்வாய்,  ஜனவரி  13, 2015.     

Friday, May 26, 2017

தத்துவம்... பித்துவம்!

*  கொதிக்கற  தண்ணியில  பிம்பம்  தெரியாது.
    அப்படித்தான்  குழம்பிக்  கிடக்கற  மனசுக்கும்  உண்மை  புரியாது.
    தெளிஞ்சுட்டு  முடிவெடு  மச்சி!
     --- இனியா
புலம்பல்  நம்பர்  ஒன்!
*  நாம  பதினஞ்சு  மார்க்  கேள்விக்கு  பிட்  எழுதிட்டுப்  போயிருப்போம்.  ஆனா,  அதையே  அஞ்சு  மார்க்  கேள்வியா  அவங்க
   மாத்திக்  கேட்டிருப்பாங்க.  அப்ப  வரும்  பாரு  ஒரு  கடுப்பு... அதுக்குப்  பேருதாண்டா  யூனிவர்சல்  வெறுப்பு!
   -- சுஜாதா.
சிந்தனைத்  துளி!
*  கடவுளுக்கும்  டாக்டருக்கும்  கோபம்  வர்றபடி  எப்பவும்  நடந்துக்கக்  கூடாது.
   ஏன்னா...
   கடவுளுக்குக்  கோபம்  வந்தா... டாக்டர்கிட்ட  அனுப்புவார்.
   டாக்டருக்கு  கோபம்  வந்தா  கடவுள்கிட்டேயே  அனுப்பிச்சுடுவார்!
  -- மகேஸ்வரி
மாங்காய்  முடிவு!
* "உலகம்  அடுத்த  வருஷம்  அழியப்  போகுதடா...!"
  "எப்படிடா  சொல்ர...?"
  "மாங்காய்  ஊறுகாய்  பாட்டில்லகூட  போட்டு  இருக்காங்கடா... எக்ஸ்பயரி  டேட்  2012  டிசம்பர்னு!"
   -- ஆஷா  சமீர்
-- அவள் விகடன்.  6-5-2011.

Thursday, May 25, 2017

ரோபோ - ஜிபோ

   சுயமாக  சிந்தித்து  செயல்படும்  ரோபோக்களைக்  கண்டுபிடிப்பதற்கான  முயற்சியில்  வந்துள்ளது,  இந்த  சின்ன  ரோபோ.  360  டிகிரி  சுழலும்  வகையில்  உள்ளது.  இதன்  பெயர்  ஜிபோ.
     ஹாய்  ஜிபோ  என  குரல்  கொடுத்தால்  திரும்பி  பார்க்கும்.  தினசரி  காலையில்  தூக்கத்திலிருந்து  எழுப்பிவிட்டு  நீங்கள்  செய்ய  வேண்டிய  வேலைகளை  ஒப்பிக்கும்.  பிறந்த  நாள்  கொண்டாட்டத்திற்கு  செல்பி  எடுக்க  வேண்டுமா?  கவலையே  வேண்டாம்.  ஜிபோ  டேக்  பிக்சர்  என்று  குரல்கொடுத்தால்  சரியான  அளவில்  எடுத்துவிடும்.
     மொத்த  குடும்பமும்  ஆன்லைன்  மூலம்  பேசவேண்டும்  என்றால்  கம்ப்யூட்டர்  கேமரா  முன்  குவிய  வேண்டியதில்லை.  தனித்தனியாக  உட்கார்ந்து  கொள்ளலாம்.  நாம்  பேசுவதற்கு  ஏற்ப  ஜிபோ  திரும்பிக்  கொள்ளூம்.  சமையலறையில்  வேலையில்  இருக்கிறீர்கள்  அப்போது  மின்னஞ்சல்  வந்தால்  குரல்  கொடுக்கும்.  கையோடு  பதில்  அனுப்பலாம்.  வீட்டுக்குள்  நுழைந்ததும்  ஹாய்  சொல்லி  வரவேற்கும்.  இன்னைக்கு  சாபிட  என்ன  இருக்கிறது  என்றோ  அல்லது  என்ன  ஆர்டர்  கொடுக்க  வேண்டும்  என்றோ  கேட்கிறது.  எல்லாமே  குரல்  கட்டளைதான்.  நாம்  தூங்கிவிட்டால்  அதுவும்  அமைதியாகிவிடுகிறது.
-- தொழில்  நுட்பம்.   வணிக  வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  12, 2015.     

Wednesday, May 24, 2017

பேட்டரி டூத் பிரஷ்

  தொழில்நுட்பம்  வளர  வளர  நமது  வாழ்வில்  அதன்  ஆதிக்கம்  அதிகரித்து  கொண்டுதானிருக்கும்.  இது  தவிர்க்க  முடியாத  ஒன்றாகிவிட்டது.  காலையில்  எழுந்தவுடன்  பல்  துலக்கவும்  இப்போது  நவீன  தொழில்நுட்பத்தில்  செயல்படும்  பல்  துலக்கியை ( டூத்  பிரஷ் ) அறிமுகப்படுத்தியுள்ளது  பிராக்டர்  அண்ட்  கேம்பிள்  நிறுவனத்தின்  அங்கமான  ஓரல்- பி.
     இந்த  பேட்டரியில்  செயல்படும்  பல்  துலக்கி  செல்போனின்  புளூ  டூத்  கட்டுப்பாட்டில்  செயல்படக்கூடியது.  அமெரிக்கா  மற்றும்  ஐரோப்பிய  நாடுகளில்  இதற்குக்  கிடைத்த  வரவேற்பைத்  தொடர்ந்து  இந்தியச்  சந்தையிலும்  இது  அறிமுகமாக  உள்ளது.  உங்கள்  பல்லை  எவ்வளவு  நேரம்  துலக்க  வேண்டும்,  சரியாக  துலக்குகிறீர்களா  என்பதற்கான  அப்ளிகேஷன்  உங்கள்  மொபைலில்  பல்  டாக்டரின்  ஆலோசனையின்படி  டவுன்லோட்  செய்ய  வேண்டும்.
     மொபைலிலிருந்து  வரும்  கட்டளையின்படி  இந்த  பிரஷ்  செயலாற்றும்.  இரவில்  நீங்கள்  பல்  துலக்கிவிட்டேன்  என்று  பல்  டாக்டரிடம்  பொய்  சொல்ல  முடியாது.  மொபைல்  அப்ளீகேஷன்  உங்களைக்  காட்டிக்  கொடுத்துவிடும்.
--  வணிக  வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  12, 2015.  

Tuesday, May 23, 2017

வயர்லெஸ் பென் டிரைவ்

  சாண்டிஸ்க்  நிறுவனம்  புதிய  பென்டிரைவ்  ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது.  மொபைல்,  ஐபேட்  மூலம்  எடுக்கும்  புகைப்படங்கள்  மற்றும்  தகவல்களை  வையை  இணைப்பின்  மூலம்  சேகரித்துக்  கொள்கிறது.  பென்டிரைவ்  மற்றும்  மீடியா  டிவைஸ்  என  இரண்டு  வடிவங்களில்  கிடைக்கிறது.
மினி  கேமரா
     கம்ப்யூட்டர்  மற்றும்  செல்போன்  உதிரி  பாகங்களைத்  தயாரிக்கும்  நிறுவனமான  ஜீனியஸ்  நிறுவனம்  கையடக்க  கேமராவை  அறிமுகப்படுத்தியுள்ளது.  இதில்  எடுக்கப்படும்  படங்கள்  உடனுக்குடன்  வையை  மூலம்  போன்  அல்லது  கணினியில்  சேமிக்கப்படும்.  இந்த  கேமரா  மூலம்  தண்ணீரிலும்  படம்  பிடிக்க  முடியும்.
கதகதப்புக்கு...
     குளிரான  நேரத்தில்  கொஞ்சம்  சூடாக  இருந்தால்  பரவாயில்லை  என்று  நினைக்கும்  நபர்களுக்காகவே  வந்துள்ளது  வார்மி.  இந்த  வார்மியை  கொஞ்சம்  குலுக்கினால்  இதிலிருந்து  சூடு  வரும்.  இதைத்  தேவைப்படும்  இடத்தில்  ஒற்றிக்கொள்ளலாம்.  நெருப்பு,  புகை  என  எந்த  தொந்தரவுகளும்  இல்லை.
-- வணிக  வீதி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  திங்கள்,  ஜனவரி  12, 2015.  

Monday, May 22, 2017

Gogo-ro G 1

  கோகோரா ஜி 1 - Gogo-ro  G 1  என்னும்  புது  வகை  எலக்ட்ரிக்  ஸ்கூட்டர்  தைவானில்  அறிமுகமாகியுள்ளது.  வண்டிகளுக்கே  உரிய  வெயிட்  இல்லாமல்  இலகுவாக  தோற்றமளிக்கும்  இந்த  ஸ்கூட்டரை  ஒரு  முறை  சார்ஜ்  செய்தால்  400  கி.மீ  வரை  செல்ல  முடியுமாம்.  அதுபோக  இந்த  வண்டியில்  30  சென்ஸார்கள்  பொருத்தப்பட்டிருப்பதால்  இதை  மொபைல்  ஆப்ஸ்  மூலம்  கண்காணித்துக்கொண்டே  இருக்கலாம்.  ஏதாவது  பிரச்னை  என்றால்  இருந்த  இடத்திலிருந்தே  சர்வீஸ்  சென் டரை  கான்டாக்ட்  செய்து  குறையை  சரி  செய்து  கொள்ளத்தான்  இந்த  வசதி.
     புல்  பேட்டரியும்  சார்ஜ்  ஆக  ஆறு  மணிநேரம்  எடுக்கும்.  சாலைகளில்  ஆங்காங்கே  சார்ஜ்  ஏற்றும்  மையங்களை  நிறுவவும்  முடிவு செய்திருக்கிறார்கள்.  இதற்காக  சிறு  சந்தா  கட்டினாலே  போதுமானது.  இதன்  அதிகபட்ச  வேகம்  மணிக்கு  60கி.மீ  ஆகும்.  இந்த  வண்டி  நம்மிடம்  இருந்தால்  செலவும்  மிச்சம்,  மாசு  பற்றி  யோசிக்கவும்  தேவையில்லை.
     உபரித்  தகவல்,  இதை  வெயிலில்  12  மணி  நேரத்துக்கு  நிறுத்தினால்  சூரிய  ஒளி  கொண்டே  பேட்டரி  புல்லாய்  சார்ஜ்  ஆகிவிடுமாம்.
--   ரவி  நாகராஜன்.  டெக்  மார்க்கெட்   சண்டெஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி  11-1 - 2015.  

Sunday, May 21, 2017

F 015 சூப்பர் கார் !

   இந்த  வாரம்  உலகத்தில்  இருக்கும்  அத்தனை  கார்  பைத்தியங்களின்  பார்வையும்  ஜெர்மனியின்  மீதே  இருந்தது.  காரணம்,  சொகுசு  கார்  நிறுவனமான  மெர்சிடீஸ்  பென்ஸ்  F  015  என்னும்  சூப்பர்  காரை  ஜெர்மனியில்  அறிமுகப்படுத்தியதே  ஆகும்.  இந்த  காரின்  லேட்டஸ்ட்  டெக்னாலஜிகளை  பட்டியலிட்டால்  டெக்  மார்க்கெட்  தொடரே  பத்தாது  போல.  முதலில்  காருக்கு  பெட்ரோல்  தேவையில்லை.
     பேட்டரி  மூலமாகவும்,  ஹைட் ரஜன்  வாயு  மூலமாகவும்  ஓடக்கூடியது.  இப்படி  இரட்டை  எரிபொருள்  பயன்படுத்தப்படுவதால்  பேட்டரியின்  சார்ஜ்  இல்லாதபோது  வாயுவை  பயன்படுத்தியும்,  வாயு  தீர்ந்துவிட்டால்  பேட்டரியை  பயன்படுத்தியும்  மாறி  மாறி  தொடர்ந்து  ஓடுமாம்.  ஆயிரத்து  500  கி.மீ களுக்கு.  மேலும்,  ஆட்டோ  நேவிகேஷன்  முறைப்படி  கொஞ்சமும்  டென்ஷன்  இல்லாமல்  பேசிக்கொண்டே  பயணிக்கும்  வகையிலும்  டிசைன்  செய்யப்பட்டிருக்கிறது.
     காரின்  உட்புறம்  வித்தியாசமாய்,  வழக்கமான  கார்  சீட்  போல்  வெறும்  சாய்மானம்  மட்டும்  இல்லாமல்  காரின்  ஒவ்வொரு  சீட்டும்  180  டிகிரி  திரும்பும்  திறன்  கொண்டது.  இதனால்  நண்பர்களுடன்  ரம்மி  விளையாடிக்  கொண்டோ,  அலுவலக  மீட்டிங்கை  நடத்திக்  கொண்டோ  பயணம்  செய்யலாம்.  இதுபோக  3டி  கேமரா,  லேசர்  விளக்குகள்  என  ஏராளமான  ஹை-டெக்  செட்டப்புகள்  இருக்கும்.
--   ரவி  நாகராஜன்.  டெக்  மார்க்கெட்   சண்டெஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி  11-1 - 2015.         

Saturday, May 20, 2017

வாஷிங் மெஷின்

  எல்ஜி  நிறுவனம்  ஒரு  புது  வகை  மெஷினை  அறிமுகப்படுத்தி  இல்லத்தரசிகளை  எல்லாம்  குஷிப்படுத்தியுள்ளது.   WD100c  and  WD200c  என்னும்  இரு  மாடல்களில்  வரும்  இந்த  வாஷிங்  மெஷினில்  ஒரே  சமயத்தில்  இரண்டு  வகையான  வாஷிங்குகளை  செய்ய  முடியுமாம்.  குறைவான  துணிகள்  இருப்பின்  கீழே  உள்ள  சிறிய  மெஷினிலும்,  மேலே  உள்ள  பெரிய  மெஷின்  மூலமும்  துவைக்க  முடியும்.
     இந்த  சின்ன  பெரிய  லோடை  தவிர,  குறிப்பிட்ட  துணிகளை  தனியாய்  துவைக்க,  அழுத்தம்  இல்லாமல்  துவைக்க,  ஊற  வைத்துத்  துவைக்க  என  ஒவ்வொன்றையும்  தனித்தனியாக  செஊஅலாம்.  இப்படி  பல  வசதிகள்  கொண்ட  இந்த  வாஷிங்  மெஷின்  சந்தையில்  சக்கை  போடு  போடும்  என்பதில்  சந்தேகமே  இல்லை.  அய்யய்யோ  இது  தெரியாம  இப்போதானே  சிங்கிள்  பிரன்ட்  எண்ட்  மெஷின்  வாங்கினேன்  எனப்  பதறுபவர்களுக்கு,  அந்த  சின்ன  மெஷினை  மட்டும்  தனியாக  வாங்கியும்  பொருத்திக்  கொள்ளலாமாம்.
-- ரவி  நாகராஜன்.  டெக்  மார்க்கெட்   சண்டெஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி  11-1 - 2015.  

Friday, May 19, 2017

பஞ்ச "வ" காரங்கள்.

  சமஸ்கிருதத்தில்  நம்  வாழ்க்கையில்  மதிப்பும்  அதன்  மூலம்  வெற்றி  பெற  ஐந்து  "வ" காரங்கள்  குறிப்பிடப்படுகின்றன.  அதாவது  'ஐந்து  வார்த்தைகள்'.  இந்த  வார்த்தைகளை  நாம்  வாழ்க்கையில்  கடைபிடிப்பது  அவசியம்  என்று  நமக்கு  ஒரு  ஸுபாஷிதம்  ( நல்ல  வார்த்தைகள்  கொண்ட  ஸ்லோகம் )  மூலம்  தெரியப்படுத்தப்படுகிறது.
     இந்த  ஸுபாஷிதத்தை  பார்ப்போமா?
வஸ்த்ரேண  வபுஷா  வாசா  வித்யா  விநயேன  ச!
வகாரை:  பஞ்சபிஹீன:  நரோ  நாயாதி  கவ்ரவம்!!
     இதன்  விளக்கம்  என்ன?
     குறிப்பிட்ட  ஐந்து  குணாதிசயங்கள்  உள்ள  மனிதர்கள்,  மரியாதைக்குரியவர்களாகவும்,  போற்றத்தக்கவர்களாகவும்,  வணங்கத்தக்கவர்களாகவும்  கருதப்படுகிறார்கள்.
     அந்தச்  சிறப்பியல்புகள்  என்னென்ன?
     வஸ்த்ரா,  வபுஷா,  வாசா,  வித்யா  மற்றும்  விநயா  ஆகும். ( வஸ்த்ரா  என்றால்  நல்ல   உடை  அணிந்தவர்.  வபுஷா  என்றால்  நல்ல  உடலமைபுக்  கொண்டவர்.  வித்யா  என்றால்  நல்ல  கல்வி,  கேள்விகளில்  சிறந்தவர்.  விநயா  என்றால்  நல்ல  வினயமாகப்  பேசத்தெரிந்தவர்.)
-- சித்ரா நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! ).
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

Thursday, May 18, 2017

அறியாத விஷயங்கள்

   தவளைகள்,  முட்டையிட்டு,  குஞ்சு  பொரிக்கக்கூடியவை.  முட்டையிலிருந்து  வெளிவரும்  தலைப்பிரட்டைகள்  மீன்களைப்போலவே  காட்சியளிக்கும்.  இந்தோனேஷியாவில்  இரு  தவளை  இரண்டு  நீண்ட  பற்களோடு  கண்டறியப்பட்டது.  அந்த  வகை  பெண்  தவளையைத்  தொடர்ந்து  கண்காணித்ததில்  முட்டையிடாமல்,  தலைப்பிரட்டைகளாகவே  குட்டிகளை  ஈன்றெடுத்தது  தெரியவந்தது.  இரட்டை  வாழ்விகள்  எல்லாமே  முட்டையிட்டுக்  குஞ்சு  பொரிக்கக்கூடியவைதான்.  முதல்  முறையாக  குட்டிப்  போடும்  தவளையைக்  கண்டு  வியப்படைந்த  ஆராய்ச்சியாளர்கள்,  மேலும்  ஆராய்ச்சிகளைத்  தொடர்ந்தால்தான்  காரணங்களை  அறிய  முடியும்  என்கிறார்கள்.  --  மனுஷன்  அறியாத  விஷயங்கள்  இன்னும்  எவ்வளவோ
உலகத்துல  இருக்கு!
-- உலக  மசாலா.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி 8,  

Wednesday, May 17, 2017

நீரின் நிழலே ஆகாயம்

   நீருக்கு  நிழல்  இருக்கிறதா?  என்று  கேட்டால், 'இல்லை'  என்றுதான்  சொல்வர்.  ஆனால்,  நீருக்கு  நிழல்  இருக்கிறது.  நிழல்  இல்லை  என்றால்  ஆகாயமே  இல்லை  என்றாகி  விடும்.  நீரின்  நிழக்  அதனுள்ளேயே  அடங்கி  விடுவதால்,  வெளீயில்  தெரிவதில்லை.  சிவனும்  நீரைப்  போல  அருள்  செய்கிறார்.  அவரை  வணங்கும்போது,  ஆன்மாவிற்கு  முக்தி  கிடைக்கிறது.  அது  அவருக்குள்ளேயே  ஒடுங்குகிறது.  இதனை  உனர்த்தும்  விதமாக  சைவ  சித்தாந்தத்தில், 'நீரார்  நிழல்'  என்று  சிவனை  வேண்டி  பாடப்பட்டுள்ளது.
மலர்  வேண்டாம்  மனம்  போதும்!
     சிவப்ருமானுக்கு  பூஜை  செய்ய  புன்னை,  வெள்ளெருக்கு,  செண்பகம்,  நந்தியாவட்டை,  நீலோத்பவம்,  பாதிரி,  அரளி,  செந்தாமரை  ஆகிய  எட்டு  வகையான  மலர்களை  பயன்படுத்தலாம்.  இம்மலர்கள்  'அஷ்ட  புஷ்பங்கள்'  எனப்படுகின்றன.  இவற்றில்  சில  இப்போது  கிடைப்பதில்லை.  இம்மலர்களை  படைத்து  மட்டும்தான்  சிவனை  வழிபட  வேண்டுமென்பதில்லை.  'நமச்சிவாய'  என  அவர்  திருநாமத்தை  உச்சரித்து,  மனம்  என்னும்  பூவால்  வழிபட்டாலே  போதும்.  மலர்களால்  அர்ச்சித்து  வணங்கிய  பலன்  கிடைத்து  விடும்.
--   தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92.  

Tuesday, May 16, 2017

பூமியை போன்று 2 கோள்கள்

மனிதர்கள்  வசிக்க  முடியும்  என  நாசா  அறிவிப்பு.  கண்டுபிடித்தது  கெப்லர்.
     விண்வெளியில்  இரண்டு  புதிய  கிரகங்கள்  அடையாளம்  காணப்பட்டுள்ளதாக  நாசா  கூறியுள்ளது.
    'கெப்லர்  மிஷன்'  எனும்  தொலை நோக்கியை  விண்வெளியில்  நாசா  செலுத்தியது.  கடந்த  2009ம்  ஆண்டு  செலுத்தப்பட்ட  இந்த  தொலை நோக்கி  இதுவரை  4,50,000 -க்கும்  மேர்பட்ட  நட்சத்திரங்களை  கண்காணித்துள்ளது.  அதன்மூலம்  இதுவரை  4,175  பூமியைப்  போன்ற  கிரகங்களை  அது  அடையாளம்  கண்டுள்ளது.  இவற்றில்  1,000-மாவது  கிரகத்தை  சமீபத்தில்  விண்வெளி  ஆய்வாளர்கள்  சோதித்தனர்.
     இந்நிலையில், விண்வெளியில்  கோல்டிலாக்ஸ்  பகுதியில்  புதிதாக  மேலும்  8  கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  இவற்றில்  இந்த 2  கிரகங்கள்  பெருமளவில்  பூமியைப் போலவே  இருப்பதாக  கூறுகின்றனர்.  இந்த  இரண்டு  கிரகங்களில்  ஒன்றுக்கு  கெப்லர்-438பி  என்றும்,  இன்னொன்றுக்கு  கெப்லர்-442பி  என்றும்  பெயர்  சூட்டப்பட்டுள்ளன.
     இந்த  கிரகங்களில்  பாறைகள்  உள்ளன  என்றும்,  அதிகளவில்  வெப்பமாகவும்  இல்லாமல்  அதேசமயம்  குளிராகவும்  இல்லாமல்  தண்ணீர்  இருப்பதற்கான  மிதமான  தட்பவெப்பம்  நிலவுவதாலும்  இங்கு  உயிர்  வாழ்வதற்கான  சாத்தியக்  கூறுகள்  இருப்பதாக  விஞ்ஞானிகள்  தெரிவிக்கின்றனர்.  மேலும்  பூமியைவிட  12  சதவீதம்  பெரியதாக  கெப்லர் -438பி கோளமும்,  கெப்லர்-442பி  கோளம்  பூமியைவிட  33 சதவீதம்  பெரியது.  அதில்  60  சதவீதம்  பாறைகள்  காணப்படுகிறது,  என்றும்  கூறினர்.
     இந்த  கிரகங்களில்  உயிர்  வாழ்வதற்கான  சாத்தியக்  கூறுகள்  தென்பட்டாலும்  அதுகுறித்து  மேலும்  அறிவது  மிகப்பெரிய  சவாலாக  இருக்கும்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  காரணம், இந்த  2  கிரகங்களும்  பூமியில்  இருந்து  பல  நூறு  ஒளி  ஆண்டுகள்  தூரத்தில்  இருக்கின்றன.
     இதில்  கெப்லர் -438பி  பூமியில்  இருந்து  470  ஒளி  ஆண்டுகள்  தொலைவிலும்,  கெப்லர்-442பி  கிரகம்  1,100  ஒளி  ஆண்டுகள்  தொலைவிலும்  உள்ளன.  முன்னது  தன்னுடைய  நட்சத்திரத்தை  35  நாட்களுக்கு  ஒரு  முறை  சுற்றிவர,  பின்னது  112  நாட்களுக்கு  ஒரு  முறை  சுற்றி  வருகிறது.
     இதுகுறித்து   விஞ்ஞானிகள்  கூறும்போது, "இந்தக்  கிரகங்கள்  உயிர்கள்  வாழ்வதற்கு  வசதியானவை  என்று  அறுதியிட்டுக்  கூற  முடியாது.  ஆனால்,  மனிதர்கள்  வசிப்பதற்குத்  தேவையான  சாத்தியக்கூறுகளை  அதிகளவில்  கொண்டவை  என்று  மட்டுமே  இப்போதைக்குச்  சொல்ல  முடியும்"  என்கிறார்கள்.
--- ஏ.எஃப்.பி.   சர்வதேசம்.
--   'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி 8,  2015.
--தினமலர்  திருச்சி  9-1-2015. 

Monday, May 15, 2017

தகவல் பலகை

*   கங்காரு  குட்டிகள்  பிறக்கும்போது  2.5  சென்டி மீட்டர்தான்  இருக்கும்.  அந்த  குட்டிகளுக்கு 'ஜோய்ல்ஸ்'  என்று  பெயர்.
*   நமது  நாட்டில்  1937ம்  ஆண்டு 'ஆல்  இந்தியா  ரேடியோ'  என்ற  பெயரில்  வானொலி  ஒலிபரப்பு  தொடங்கப்பட்டது.  1957ம்
    ஆண்டு  அக்டோபர்  1ம்  தேதி  விவிதபாரதி  தொடங்கப்பட்டது.
*   வேறு  நீரில்  குளித்துச்  சுத்தமான  பிறகே,  கோயில்  குளத்தில்  நீராட  வேண்டும்  என்பது  நியதி.
*   ப்ராவக்  வம்சம்  என்பது  யாகம்  செய்யும்  கர்த்தாவும்  அவர்  மனைவியும்  தங்கும்  இடம்.  இது  யக்ஞ  வாடிகைக்குக்  கிழக்கு
    திசையில்  அமைக்கப்பட்டிருக்கும்.
*   வாரணாசி,  காசி,  பெனாரஸ்  என்ற  நகரத்தில்  80-க்கும்  மேலான  காட்  என்று  அழைக்கப்படும்  படித்துறைகள்
    இருக்கின்றன.
*  ஒவ்வொரு  படித்துறையிலும்  குறைந்தது  80  படிகள்.  அஸ்லி  காட்டிலிருந்து  80-க்கும்  மேலான  படித்துறைகள்.  10  மைல்
    நீளத்திற்கு  தஸ்ஸா  ஸ்வேத  மேதா  காட்,  கங்கையினால்  சுத்தப்படுத்தப்படுகிறது.
*  திருக்குறளில்  அத்தனை  தமிழ்  எழுத்துக்களும்  இடம்  பெற்று  விட்டன  என்று  சொல்லமுடியாது.  'ஔ'  என்ற  எழுத்து  ஒரு
   முறை  கூட  இடம்  பெறவில்லை.

Sunday, May 14, 2017

மின்னல் வேக பயணம்

*   அதிவேக  பயணத்தின்  அடுத்த  கட்டமாக  வருகிறது  ஹைப்பர்லூப்  பயணத்  திட்டம்.  கிட்டத்தட்ட  ஒளியின்  வேகத்தில்
    பயணிப்பதற்கு  ஒப்பானது.
*   இதை  அமேரிக்காவைச்  சேர்ந்த  நிறுவனம்  கண்டுபிடித்துள்ளது.  அது  என்ன  ஹைப்பர்லூப்  என்பவர்கள்  எளிதாக  புரிந்து
    கொள்ள  வேண்டும்  என்றால்,  நீண்ட  குழாய்க்குள்  வழுக்கிக்கொண்டே  பயணிப்பது  போல  என்று  சொல்லலாம்.
*   காந்த  சக்தி  மூலம்  இயங்கும்  இந்த  ஹைப்பர்லூப்  இயந்திரத்தில்  அமர்ந்ததும்  மேலே  எழும்பி  அப்படியே  அசுரவேகத்தில்
    பயணிக்கும்.  காந்த  அலைகள்  மூலம்  இயங்குவதால்  பயணக்  களைப்பே  இருக்காது.
*   6  மணிநேரம்  பயணம்  செய்ய  வேண்டிய  தூரத்தை  அரை  மணி  நேரத்தில்  அடைந்துவிடலாம்.  இது  10  ஆண்டுகளில்
    நடைமுறைக்கு  வரும்  என்று  தெரிவித்துள்ளது.
*   அமெரிக்காவின்  லாஸ்வேகாஸ்  அல்லது  லாஸ்  ஏஞ்சலீஸ்  நகரிலிருந்து  சான் பிரான்சிஸ்கோ  வரையிலான  தூரத்துக்கு
    முதல்  கட்ட  பயணத்துக்கான  பணிகள்  தொடங்க  உள்ளாது.
--  வணிக வீதி.  தொழில் நுட்பம்.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015. 

Saturday, May 13, 2017

கவிழும் 'இலை'

  வீட்டிலேயே  தோட்டம்  உள்ளவர்கள்,  பூஜைக்குரிய  பூக்களைப்  பறித்து  சுத்தமான  கூடையில்  போட  வேண்டும்.  புடவைத்  தலைப்பில்  போடக்கூடாது.  பூக்களை  சுவாமியின்  பாதத்தில்  போடும்  போது, காம்பு  கீழேயும்  பூவிதழ்  மேலாகவும்  இருக்குமாறு  போட்டுவதே  முறையானது.  பூ  மட்டுமலாமல்  இலை,  பழம்  இவற்றிற்கும்  இது  பொருந்த்ம்.
    "புஷ்பம்  பத்ரம்  பலம்  சைவ  யதோத்பன்னம்  ததார்ப்பயேத்"
என்கிறது  சாஸ்திரம்.  அதாவது,  பூக்கள்,  இலைகள்,  கனிகள்  அனைத்தையும்  மேல்நோக்கி  படைக்க  வேண்டும்  என்பது  இதன்  பொருள்.  ஒரே  ஒரு  இலைக்கு  மட்டும்  விதிவிலக்கு  உண்டு.  வில்வ  இலையால்  சிவனை  அர்ச்சிக்கும்போது  தலைகீழாக  கவிழ்ந்து  இருக்குமாறு  அர்ச்சிப்பது  சிறப்பு.
பூஜைக்குரிய  திசை
     விநாயகர்,  முருகன்,  சிவன்,  விஷ்ணு,  சூரியன்  ஆகிய  தெய்வங்களை  வணங்கும்போது  சுவாமியை  கிழக்கு  நோக்கி  வைத்து,  நாம்  வடக்கு  நோக்கி  அமர்ந்து  பூஜை  செய்வதே  சிறந்தது.  பெண்  தெய்வங்களான  காளி,  மாரி,  லட்சுமி,  பிற  அம்மன்களை  வழிபடும்போது  நேருக்கு  நேராக  அமர்ந்து  பூஜை  செய்யலாம்.  அதாவது, அம்மன்  கிழக்கு       நோக்கி  இருக்க,  நாம்  மேற்கு  நோக்கியோ  அல்லது  அம்மன்  வடக்கு  நோக்கி  இருக்க,  நாம்  தெற்கு  நோக்கியோ  பூஜை  செய்யலாம்.
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92. 

Friday, May 12, 2017

சாக்கடல்

    உலகிலேயே  அதிகமான  உப்புத்  தன்மை  கொண்ட  நீர்நிலை  சாக்கடல்.  மற்ற  கடல்களை  விட  9.6  மடங்கு  உப்பு  இந்தச்  சாக்கடலில்  இருக்கிறது.  அதனால்  இங்கே  மீன்  போன்ற  எந்த  உயிரினங்களும்  வாழ  முடிவதில்லை.  தண்ணீரின்  அடர்த்தி  அதிகம்  என்பதால்  மனிதர்கள்  மிதந்துகொண்டே  படிக்கலாம்.  மருத்துவக்குணம்  மிக்கதாக  நம்பப்படுவதால்  இங்கே  சுற்றுலாப்  பயணிகளின்  வருகை  அதிகம்.  ஆண்டுதோறும்  இந்தச்  சாக்கடலில்  ஒரு  மீட்டர்  உயர்த்துக்குத்  தண்ணீர்  குறைந்து  வருகிறது.  1950ம்  ஆண்டிலிருந்து  கணக்கெடுக்கப்பட்டு  வருகிறது.  இதுவரை  40  மீட்டர்  அளவுக்குத்  தண்ணீர்  குறைந்துவிட்டது.  ஜோர்டான்  ஆற்றில்  இருந்து  வரும்  தண்ணீரின்  அளவு  குறைவதாலேயே  சாக்கடலின்  தண்ணீர்  அளவு  குறைந்திருப்பதாகச்  சொல்கிறார்கள்.  சாக்கடலை  ஒட்டிய  பூங்காக்கள்,  நீர்  விளையாட்டுகள்  போன்றவை  தண்ணீர்  தொலைவுக்குச்  சென்றுவிட்டதால்  மூடப்பட்டிருக்கின்றன.  +++ அதிசயமாக  இருந்த  சாகடல்,  கவலை  தரும்  விஷயமாக  மாறிருச்சே...
--  உலக  மசாலா.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்  புதன், ஜனவரி 7, 2015.     

Thursday, May 11, 2017

ஷெல் பெட்ரோல் பங்க் கழிப்பறை

   பிலிப்பைன்ஸில்  உள்ள  ஷெல்  பெட்ரோல்  பங்க்  கழிப்பறையைப்  பற்றித்தான்  உலகமே  பேசிக்கொண்டிருக்கிறது.
யு டியூப்பில்  வெளியிடப்பட்ட  கழிவறை  வீடியோவை  40  லட்சம்  பேர்  பார்வையிட்டிருக்கிறார்கள்.  டாக்பிலரன்  நகரில்  இருக்கும்  இந்தக்  கழிவறை  முழுவதும்  மரத்தால்  செய்யப்பட்டிருக்கிறது.  சுவர்களை  எழில்  மிக்க  ஓவியங்கள்  அலங்கரிக்கின்றன.  ஓர்  அலமாரியில்  புத்தகங்கள்  வைக்கப்பட்டிருக்கின்றன.  ஆங்காங்கே  சின்னச்  சின்ன  அலங்காரப்  பொருள்கள்  உள்ளன.  அட்டகாசமான  விளக்குகள்  ஒளியை  உமிழிந்துகொண்டிருக்கின்றன.  ஒரு  மேஜை,  இரண்டு  நாற்காலிகள்  போடப்பட்டிருக்கின்றன.  இனிய  நறுமணம்  வீசிக்கொண்டிருக்கிறது.  சுற்றுலாப்பயணிகளைக்  கவர்வதற்காக  இந்தக்  கழிவறையைக்  கட்டியிருப்பதாகச்  சொல்கிறார்கள்.  இது  பொதுக்கழிவறை.  அந்த  வழியே  செல்லும்  யார்  வேண்டுமானாலும்  பயன்படுத்தலாம்.  இவர்களே  தங்கும்  விடுதிகளையும்  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.பொதுக்  கழிவறையே  இவ்வளவு  நன்றாக  இருந்தால்,  தங்கும்  விடுதி  எப்படி  இருக்கும்  என்று  பயணிகள்  ஆர்வத்தோடு  குவிகிறார்கள்.  பிலிப்பைன்ஸில்  பல  இடங்களிலும்  இதுபோன்ற  கழிவறைகளைக்  கட்டுவதற்கு  நிறைய  பேர்  ஆர்வமாக  இருக்கிறார்கள்.  +++  நல்ல  நியாபார  உத்தி!
-- உலக  மசாலா.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்  புதன், ஜனவரி 7, 2015.  

Wednesday, May 10, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1.   அப்புத்தலம்  எனக்  குறிப்பிடுவது... திருச்சி  அருகிலுள்ள  திருவானைக்காவல் ( அப்பு  என்றால் தண்ணீர் ).
2.   பூலோக  கைலாயம்  என  சிறப்பிக்கப்படும்  தலம்... சிதம்பரம்.
3.   ஜடாயு  சிவனை  பூஜிக்கும்  பேறு  பெற்ற  தலம்... வைத்தீஸ்வரன் கோயில்.
4.   சங்க  காலத்தில் 'மாயோன்'  என  குறிக்கப்பட்டவர்... திருமால்.
5.   திவ்ய  பிரபந்தத்தில்  நீளாதேவியைப்  பாடிய  ஆழ்வார் ... திருமங்கையாழ்வார்.
6.   கடவுளை  அடி  முதல்  முடி  வரை  பாடுவது ... பாதாதி கேச வர்ணனை.
7.   அரியர்த்தர்  என்று  குறிப்பிடப்படுபவர் ... சங்கர நாராயணர்.
8.   ஆதிசங்கரர்  சிவானந்த லஹரியை  இயற்றிய  தலம் ... ஸ்ரீசைலம்.
9.   காசி  என்பதன்  பொருள் ... பிரகாசம்  அல்லது  ஒளி.
10. காளிதாசர்  எழுதிய  முதல்  நூள் ... சியாமளா தண்டகம்.
-- அர்ச்சனைப்பூக்கள்.  பக்திமாலை.
-- தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92. 

Tuesday, May 9, 2017

பஸ்ஸுக்கு தனி வழி!

  அகமதாபாத்  நகரத்தின்  சாலைஒ  போக்குவரத்து  கிட்டத்தட்ட  அமெரிக்கா  மற்றும்  ஐரோப்பிய  நாடுகளுக்கு  இணையாக  உள்ளது  என்று  சொல்லலாம்.
    இங்குள்ள  சாலைகளில்  விரைவுப்  பேருந்துக்கு  என்று  தனியாக  ஒரு  லைன்  உள்ளது.
  இந்த  லைனில்  இந்த  BRTS  பேருந்து  தவிர  வேறு  வாகனங்கள்  செல்வதில்லை.  தற்போது  இந்த  தடத்தில்  முழுவதும்  ஏசி  பஸ்கள்  இயக்கப்படுகின்றன.
   இங்கு  பயணிப்பது  டெல்லி  மெட்ரோவுக்கு  இணையாக  இருப்பதாகச்  சொல்கின்றனர்  மக்கள்.
கடல்  மீது  சூரிய  மின்னுற்பத்தி
   சூரிய  ஆற்றலிலிருந்து  மின்  உற்பத்தியை  பெருக்குவதற்கு  உலகின்  பல  நாடுகளும்  முன்னுரிமை  கொடுத்து  வருகின்றன.  வீட்டு  மொட்டை  மாடி  முதல்  பயன்படுத்தாத  தரிசு  நிலம்வரை  சூரிய  ஒளி  பலகைகள்  வைக்கப்பட்டு  வருகின்றன.
   தற்போது  ஜப்பானில்  கடல்  மீது  சூரிய  மின்  பலகைகள்  அமைக்க  உள்ளனர்.  1,80,000  சதுர  மீட்டர்  பரப்பளவுக்கு  இந்த  சூரிய  மின்  பலகைகள்  அமைய  உள்ளன.
   இதன்  மூலம்  ஆண்டுக்கு  15,635  மெகாவாட்  மின்  உற்பத்தியை  செய்யப்படும்.  சூரியன்  இருக்கும்  திசைநோக்கி  நகரும்  விதமாகவும்  இந்த  பலகைகள்  வடிவமைக்கப்பட்டுள்ளது  இதன்  சிறப்பம்சமாகும்.
--  வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.

Monday, May 8, 2017

கோ டென்னா

 மொபைல்  நெட்வோர்க்  கிடைக்கவில்லை  என்று  இனி  கவலைப்பட  வேண்டாம்.  செல்போன்  அலைவரிசை  கிடைக்காத  இடங்களிலும்  மெசேஜ்  மூலம்  தொடர்பு  கொள்ள  வந்துவிட்டது  கோ டென்னா  என்கிற  சிறிய  கருவி.
     ஸ்மார்ட்போன்  ப்ளூடூத்  இணைப்பின்  வழியாக  இந்த  கருவி  இயங்கும்.  காடுகளில்  அட்வெஞ்சர்  சுற்றுலா  செல்பவர்கள்,  மலை  ஏறுபவர்கள்  மற்றும்  தொலை  தொடர்பு  இல்லாத  இடங்களுக்கு  சுற்றுலா  செல்பவர்களின்  தகவல்  தொடர்புக்கு  இது  உதவுகிறது.  மிக  குறைந்த  ரேடியோ  அலைவரிசையிலும்  இந்த  கருவி  இயங்குகிறது.  ஒரு  போனிலிருந்து  அனுப்பும்  செய்தியை  இந்த  கருவி  வாங்கி  எதிர்முனையில்  இருக்கும்  இன்னொரு  கோ டென்னாவுக்கு  அனுப்பும்.  அதன்  மூலம்  பெறப்படும்  செய்தி  தேவையானவர்களுக்கு  சென்று  சேரும்.  நெட்வொர்க்  இல்லாத  இடங்களிலும்  2  முதல்  6  கிலோ  மீட்டர்கள்  வரை  இந்த  கருவி  செயல்படும்.
-- வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.   மொபைல்  நெட்வோர்க்  கிடைக்கவில்லை  என்று  இனி  கவலைப்பட  வேண்டாம்.  செல்போன்  அலைவரிசை  கிடைக்காத  இடங்களிலும்  மெசேஜ்  மூலம்  தொடர்பு  கொள்ள  வந்துவிட்டது  கோ டென்னா  என்கிற  சிறிய  கருவி.
     ஸ்மார்ட்போன்  ப்ளூடூத்  இணைப்பின்  வழியாக  இந்த  கருவி  இயங்கும்.  காடுகளில்  அட்வெஞ்சர்  சுற்றுலா  செல்பவர்கள்,  மலை  ஏறுபவர்கள்  மற்றும்  தொலை  தொடர்பு  இல்லாத  இடங்களுக்கு  சுற்றுலா  செல்பவர்களின்  தகவல்  தொடர்புக்கு  இது  உதவுகிறது.  மிக  குறைந்த  ரேடியோ  அலைவரிசையிலும்  இந்த  கருவி  இயங்குகிறது.  ஒரு  போனிலிருந்து  அனுப்பும்  செய்தியை  இந்த  கருவி  வாங்கி  எதிர்முனையில்  இருக்கும்  இன்னொரு  கோ டென்னாவுக்கு  அனுப்பும்.  அதன்  மூலம்  பெறப்படும்  செய்தி  தேவையானவர்களுக்கு  சென்று  சேரும்.  நெட்வொர்க்  இல்லாத  இடங்களிலும்  2  முதல்  6  கிலோ  மீட்டர்கள்  வரை  இந்த  கருவி  செயல்படும்.
-- வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.  

Sunday, May 7, 2017

காசிக்கு நேர் தலங்கள்

    1. திருவெண்காடு, 2. திருவையாறு, 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5. திருச்சாய்க்காடு, 6. திருவாஞ்சியம்.
சிவராத்திரி  விசேடத்  தலங்கள்
    1.கச்சி ஏகம்பம், 2. திருக்காளத்தி, 3. கோகர்ணம், 4. திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம் ), 5. திருவைகாவூர்
தாண்டவச்  சிறப்புத்  தலங்கள்
    தில்லை, பேரூர் - ஆனந்த தாண்டவம்,  திருஆரூர் - அசபா தாண்டவம்,  மதுரை - ஞானசுந்தர தாண்டவம்,  புக்கொளியூர் - ஊர்த்துவ தாண்டவம்,  திருமுருகன்பூண்டி - பிரம தண்டவம்
புலியூர்கள்
    1.பெரும்பற்றப்புலியூர் ( சிதம்பரம் ), 2. திருப்பாதிரிப்புலியூர், 3. ஓமாம்புலியூர், 4. எருக்கத்தம்புலியுர், 5. பெரும்புலியூர்.
நால்வர்  தில்லைக்  கொயிலுக்குள்  சென்ற  வழி
     திருஞானசம்பந்தர் - தெற்குக் கோபுரவாயில்.  திருநாவுக்கரசர் - மேற்குக்  கோபுரவாயில். சுந்தரமூர்த்தி  சாமிகள் - வடக்குக் கோபுரவாயில்.  மாணிக்கவாசகர் - கிழக்குக் கோபுரவாயில்.
-- தினமலர் பக்திமலர். ஜனவரி 1, 2015.   

Saturday, May 6, 2017

கோடக் ஸ்மார்ட் போன்

  கோடக்  நிறுவனம்  ஸ்மார்ட்போன்  துறையில்  இறங்கியுள்ளது.  இந்த  போனில்  சிறப்பு  என்னவென்றால்  கோட்டக்  கேமராவில்  படம்  பிடிப்பதுபோல  ஸூம்  வசதி  உள்ளது.  முன்பக்கம்  அதன்  வழக்கமான  கேமரா  தோற்றமும்,  பின்பகுதியில்  ஸ்மார்ட்போன்  திரை  இயங்குவது  போலவும்  இருக்கும்.
கண்ணாடி  படகு
    படகுப்  பிரியர்கள்  விரும்பும்  வண்ணம்   முழுவதும்  கண்னாடியிலான  படகுகள்  வந்துள்ளன.  இந்த  படகில்  பயணிக்கும்போது  கடலில்  நீந்திக்  கொண்டிருப்பது  போலவே  அனுபவத்தை  தரும்.  விலை  ரூ.15  லட்சம்.
குறைந்த  விலை  ஸ்மார்ட்போன்
    குறைந்த  விலையில்  டேப்லெட்களை  தயாரித்து  புரட்சிசெய்த  டேட்டாவைண்ட்  நிறுவனம்  அடுத்ததாக  குறைந்த  விலையில்  ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்த  உள்ளது.
    இந்த  ஸ்மார்ட்போனின்  விலை  ரூ.2000  என  நிர்ணயம்  செய்துள்ளனர்.  இந்த  ஸ்மார்ட்போனுடன்  ஒரு  வருடத்திற்கான  நெட்வொர்க்  இணைப்பையும்  சலுகை  விலையில்  வழங்கத்  திட்டமிட்டுள்ளது  டேட்டாவைண்ட்.
--  வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.  

Friday, May 5, 2017

விலை

விலை  எடை  நிறுவனங்களின்  உத்தி
எப்படி  கண்டுபிடிப்பது?
     வழக்கமாக  100  கிராம்  சோப்  என்று  நினைத்து  வாங்குவோம். 90  கிராம்தான்  இருக்கும்.  50  கிராம்  பேஸ்ட்  என்று  நம்பி  வாங்கினால்  40  கிராம்தான்  பேக்  செய்யப்பட்டிருக்கும். அதற்குத்தான்  விலை  குறிப்பிட்டிருப்பார்கள்.  இதற்கு  முன்பு  100  கிராமும்,  50  கிராமும்  என்ன  விலையில்  விற்பனை  ஆனதோ  அதே  விலையில்  தற்போது  40  கிராமும்,  90  கிராமும்  விற்பனை  செய்யப்படுகிறது.
   சோப்பு,  பேஸ்ட்,  டீ தூள்,  பிஸ்கட்  முதல்  மசாலா  பொருட்கள்  வரை  அனைதிலும்  இந்த  வகையிலான  எடை  குறைப்பு  வித்தை  சத்தமில்லாமல்  நடந்து  வருகிறது.  இதில்  நிறுவன  பேதமே  கிடையாது.  பெரும்பாலும்  அனைத்து  நிறுவனங்களுமே  இந்த  உத்தியைக்  கடைபிடிக்கின்றன.
ஏமாற்றும்  உத்தியா?  
   விலை  ஏற்றினால்  வாடிக்கையாளரை  இழக்கலாம்  என  நினைக்கும்  நிறுவனங்கள்  இந்த  உத்தியை  நேரடியாக  நுகர்வோரிடத்தில்  சொல்லலாமே  என்கிற  கேள்வி  எழுகிறது.  50  காசு  விலை  குறைத்தால்  பல  லட்சம்  செலவு  செய்து  விளம்பரம்  செய்யும்  நிறுவனங்கள்  இந்த  விஷயத்தை  மட்டும்  ஏன்  இருட்டடிப்பு  செய்கின்றன.
இருக்கும் ... ஆனா  இருக்காது...
    விலையும்  ஏற்றக்கூடாது,  லாபமும்  குறையக்கூடாது,  தரத்திலும்  சறுக்கக்கூடாது,  வாடிக்கையாளர்களையும்  இழக்கக்கூடாது  என்கிற  பலமுனை  யோசனைகளிலிருந்து  நிறுவனங்கள்  இந்த  உத்தியை  கடைப்பிடிக்கின்றன.  பிஸ்கட்டின்  வழக்கமான  அளவைவிட  சற்று  சிறிய  சைஸ்  ஆக  இருக்கிறது  என்று  தோன்றுகிறதா... இதுதான்  அந்த  இருக்கும்... ஆனா  இருக்காது...
-- வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.  

Thursday, May 4, 2017

அக்ரோனிம் அறிவோம்

  ஆங்கிலத்தில்  பல  தொடர்  வார்த்தைகளின்  முதல்  எழுத்துகளை  வைத்து  உருவாகும்  வார்த்தை  -  ஒரு  தனி  வார்த்தையாக  உருவானால், அது  அக்ரோனிம் ( ACRONYM )  எனப்படும்  -  உதாரணமாக, AIDS  என்பது  Acquired Immuno Deficiency Syndrome  என்ற  வார்த்தைகளின்  மூலம்  உருவானது.  அதேபோல  NEWS  என்ற  பிரபல  வார்த்தை  North East West south என்று  திசைகளை  வைத்து  உருவானதே.  இதோ  மேலும்  சில  அறியாத  அக்ரோனிம்கள்:
CHESS - Chariot,  Horse,  Elephant, Soldiers
JOKE - Joy Of Kids Entertainment
AIM - Ambition in Mind
DATE - Day and Time evolution
EAT - Energy and Taste
PEN - Power enriched in Nib
SMILE - Sweet memories in lips expression
BYE - Be With you Everytime.
-- தொகுப்பு: எம்.விக்னேஷ்,  விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.
-- வெற்றிக்கொடி. 'தி இந்து'  இணைப்பு. செவ்வாய்,  ஜனவரி 6,  2015.

Wednesday, May 3, 2017


கோடக் ஸ்மார்ட் போன்

  கோடக்  நிறுவனம்  ஸ்மார்ட்போன்  துறையில்  இறங்கியுள்ளது.  இந்த  போனில்  சிறப்பு  என்னவென்றால்  கோட்டக்  கேமராவில்  படம்  பிடிப்பதுபோல  ஸூம்  வசதி  உள்ளது.  முன்பக்கம்  அதன்  வழக்கமான  கேமரா  தோற்றமும்,  பின்பகுதியில்  ஸ்மார்ட்போன்  திரை  இயங்குவது  போலவும்  இருக்கும்.
கண்ணாடி  படகு
    படகுப்  பிரியர்கள்  விரும்பும்  வண்ணம்   முழுவதும்  கண்னாடியிலான  படகுகள்  வந்துள்ளன.  இந்த  படகில்  பயணிக்கும்போது  கடலில்  நீந்திக்  கொண்டிருப்பது  போலவே  அனுபவத்தை  தரும்.  விலை  ரூ.15  லட்சம்.
குறைந்த  விலை  ஸ்மார்ட்போன்
    குறைந்த  விலையில்  டேப்லெட்களை  தயாரித்து  புரட்சிசெய்த  டேட்டாவைண்ட்  நிறுவனம்  அடுத்ததாக  குறைந்த  விலையில்  ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்த  உள்ளது.
    இந்த  ஸ்மார்ட்போனின்  விலை  ரூ.2000  என  நிர்ணயம்  செய்துள்ளனர்.  இந்த  ஸ்மார்ட்போனுடன்  ஒரு  வருடத்திற்கான  நெட்வொர்க்  இணைப்பையும்  சலுகை  விலையில்  வழங்கத்  திட்டமிட்டுள்ளது  டேட்டாவைண்ட்.
--  வணிக வீதி.
-- . 'தி இந்து'  இணைப்பு. திங்கள்,  ஜனவரி 5,  2015.  

ஸ்டையலஸ்

  ஆப்பிள்  நிறுவனம்  சத்தமில்லாமல்  2010 ஆம்  ஆண்டு  ஸ்டையலஸ் எனப்படும்  ஒரு  எலக்ட்ரானிக்  பேனாவுக்கு  பேடன்ட்  அப்ளை  செய்து  இந்த  வாரம்  அப்ரூவலும்  வாங்கிவிட்டது.  நீங்கள்  டைப்  செய்ய  நினைக்கும்  வரிகளை  இந்த  வயர்லெஸ்  ஸ்டையலஸ்  மூலம்  காற்ரில்  எழுதினாலோ,  வரைந்தாலோ  அது  அப்படியே  ஐபேட் , ஐபோன்  மற்றும்  மேக்  கண்னியில்  அழகாக  எழுத்துக்களாய்  பதிவாகுமாம்.  இக்  கருவியை  வைத்து  மீட்டிங், ஸ்கூல்  போர்டுகளில்  எழுதி  விளக்கும்  அத்தனை  விஷயங்களையும்  அப்படியே  அச்சில்  வார்த்துக்  கொள்ளலாம்.  இதனால்  இனி  ஸ்கூலில்  ஆசிரியர்  சொல்லிக்கொடுக்கும்  விஷயமாகட்டும்,  ஆபீஸ்  மீட்டிங்கில்  விவாதிக்கப்படும்  விஷயங்களாகட்டும்  அவை  எல்லாம்  டிஜிட்டல்  காப்பியாய்  உங்களுக்கு  கிடைக்கும். உண்மையில்  இது  ஒரு  மாயாஜால  கண்டுபிடிப்புதான்.
--  ரவி  நாகராஜன்.  ( டெக் மார்க்கெட் ) சண்டே  ஸ்பெஷல்.
--தினமலர்  திருச்சி  4-1-2015.  

Tuesday, May 2, 2017

வயர்லெஸ் ஸ்பீக்கர் டெக்னாலஜி

வயர்லெஸ்  ஸ்பீக்கர்  டெக்னாலஜிக்கு  உலகம்  முழுவதும்  ஏகபோக  வரவேற்பு.  இப்போது  அடுத்த  ஆச்சர்யமாய்  Ecopebble, என்னும்  பவர்லெஸ்  ஸ்பீக்கர்களும்  சந்தையில்  அறிமுகமாக  தயாராக  உள்ளன. வயர்லெஸ்  சரி.  அது  என்ன  பவர்லெஸ்?  வயர்  இல்லாத  ஸ்பீக்கர்களாக  இருந்தாலும்  அவற்றை  இயக்க  பவர்  வேண்டும்.  ஸோ,  சார்ஜ் போடும்போது  வயர்  பயன்படுத்தித்  தான்  ஆக  வேண்டும்.  சார்ஜ் ஏறியதும்  வயர்லெஸ்ஸாய்  அவற்றை  பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது  இந்த  ஸ்பீக்கர்களோடு  ஒரு  சோலார்  பேனலை  நிறுவி  அதன்  மூலம்  மின்சாரத்தை  உற்பத்தி  செய்து  இயங்குமாறு  வட்டிவமைத்திருக்கிறார்கள்.  கலிபோர்னியாவை சேர்ந்த  கிரேஸ்  டிஜிட்டல்  என்ற  கம்பெனியின்  விஞ்ஞானிகள், இந்த  சோலார்  பேனல்  மூலம்  ஸ்பீக்கர்களுக்கு  மட்டுமல்ல  வீட்டில்  உள்ள  மற்ற  கேட்ஜட்களுக்கும்  ம்மின்சாரம்  கிடைக்குமாம்.  அதுவும்  10,000 -mAh  பேட்டரியால்  தொடர்ந்து  50  மணி  நேரத்துக்கு.  சூப்பர்ல!
-- ரவி  நாகராஜன்.  ( டெக் மார்க்கெட் ) சண்டே  ஸ்பெஷல்.
--தினமலர்  திருச்சி  4-1-2015.  

Monday, May 1, 2017

பூட்டுக்கும் தாழ்ப்பாள்

    பூட்டுகளில்  6  லீவர்,  7  லீவர்  எனக்  குறிப்பிட்டிருப்பார்கள்.  அது  எதைக்  குறிக்கிறது  தெரியுமா?
      6  லீவர்  பூட்டில்  6  தாழ்ப்பாள்களும்,  7  லீவர்  பூட்டில்  7  தாழ்ப்பாள்களும்  இருக்கும்.  பூட்டின்  உளமைப்புக்கு  ஏற்ப  சாவியிலுள்ள  தாழ்ப்பாள்கள்  ஒவ்வொன்றும்  ஒவ்வொரு  தாழ்ப்பாளைத்  திறக்கும்.  ஒரே  நேரத்தில்  எல்லாத்  தாழ்ப்பாள்களும்  திறக்கப்பட்டு  பூட்டு  திறந்து  கொள்ளும்.  இந்த  வகைகளில்  பொய்  சாவி  தயாரிப்பது  கஷ்டம்  என்பதால்  இந்த  ஏற்பாடு.
-- டி.பச்சமுத்து,  கிருஷ்ணகிரி.
ஒரு  வித்தியாசம்
     பட்டிமன்றம்  ஒன்றில்  கேட்டேன்.  "ஆணுக்கும்     பெண்ணுக்கும்  ஒரு  வித்தியாசம்  உண்டு  என்ன  தெரியுமா?"  என்றவர்,  "ஆண்  ஒரு  காதில்  காதில்  வாங்கி  இன்னொரு  காதில்  விட்டுவிடுவான்.  ஆனால்,  ஒரு  பெண்  காது  வழியாக  வாங்கி  வாய்  வழியாக  விட்டுவிடுவாள்"  என்றார்  பேச்சாளர்.  அவையில்  ஒரே  சிரிப்பலை.
-- பாலு,  சென்னை.
புதைக்கப்பட்ட  தங்கம்!
     1987  டிசம்பர்  25ம்  தேதி  மாலை  4.10  மணிக்கு,  மறைந்த  எம்.ஜி.ஆரின்.  உடலை  அடக்கம்  செய்தபோது,  பேராசிரியர் தெ.ஞானசுந்தரம்  சொன்னார் :  "மண்ணைத்  தோண்டி  தங்கத்தை  எடுப்பார்கள்.  இங்கே  மண்னைத்  தோண்டி  தங்கத்தைப்  புதைக்கிறார்கள்".
-- அ.யாழினி  பர்வதம்,  சென்னை- 78.
-- கல்கி  இதழ்.  14  டிசம்பர்  2014.
-- இதழ் உதவு :  செல்லூர் கண்ணன்.