பிலிப்பைன்ஸில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்க் கழிப்பறையைப் பற்றித்தான் உலகமே பேசிக்கொண்டிருக்கிறது.
யு டியூப்பில் வெளியிடப்பட்ட கழிவறை வீடியோவை 40 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். டாக்பிலரன் நகரில் இருக்கும் இந்தக் கழிவறை முழுவதும் மரத்தால் செய்யப்பட்டிருக்கிறது. சுவர்களை எழில் மிக்க ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. ஓர் அலமாரியில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே சின்னச் சின்ன அலங்காரப் பொருள்கள் உள்ளன. அட்டகாசமான விளக்குகள் ஒளியை உமிழிந்துகொண்டிருக்கின்றன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. இனிய நறுமணம் வீசிக்கொண்டிருக்கிறது. சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதற்காக இந்தக் கழிவறையைக் கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். இது பொதுக்கழிவறை. அந்த வழியே செல்லும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இவர்களே தங்கும் விடுதிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.பொதுக் கழிவறையே இவ்வளவு நன்றாக இருந்தால், தங்கும் விடுதி எப்படி இருக்கும் என்று பயணிகள் ஆர்வத்தோடு குவிகிறார்கள். பிலிப்பைன்ஸில் பல இடங்களிலும் இதுபோன்ற கழிவறைகளைக் கட்டுவதற்கு நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். +++ நல்ல நியாபார உத்தி!
-- உலக மசாலா. சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ் புதன், ஜனவரி 7, 2015.

No comments:
Post a Comment