Sunday, May 28, 2017

தமிழ்மொழி

  தமிழ்மொழி  தோன்றியது  பற்றிப்  பெரியோர்  கூறியுள்ள  செய்தி  ஒன்று  உண்டு.  சிவபெருமானின்  ( டமருகம் )  உடுக்கையிலிருந்து  இருபுறமும்  வெளிவந்த  ஒலியே  சமஸ்கிருதமும்,  தமிழும்  என்பது  அது.  ஒருபுறத்திலிருந்து  வந்த  ஒலி  தமிழ்.  மறு  புறத்தது  சமஸ்கிருதம்.  இதை  ஏற்றுக்  கொள்வதும்  மறுப்பதும்  அவரவர்  உளப்பாங்கைப்  பொறுத்தது.
-- புலவர்  பாரத  சி.வி.சேஷாத்ரி.
விபூதி
     சைவர்கள்  விபுதி  அணிகிறார்கள்.  நெற்றி  நிறையப்  பூசுவதோடு   உடம்பெல்லாமும்  பூசுகிறார்கள்.  இந்த  முறைக்கு  உத்தூளனம்  என்று  பெயர்.  அதையே  தண்ணீரில்  குழைத்து  உச்சி,  நெற்றி,  மார்பு,  உந்தி,  முழங்கால்,  விலாக்கள்,  தோள்,  முழங்கை,  மணிக்கட்டு  ஆகிய  இடங்களில்  மூன்று  விரல்களால்  இடுவதற்குத்  தீட்சை  பெற்றிருக்க  வேண்டும்.  சிவபெருமானுடைய  திருநாங்களாக  ஆசானம்,  தத்புருஷம்,  அகோரம்,  வாமதேவம்,  ஸ்த்டோஜாதம்  என்ற  ஐந்தையும்  நம;  என்ற  கோடி  சேர்த்து  அணிவது  வழக்கம்.
     போருக்குப்  போகிற  வீரன்  புறப்படுவதற்கு  முன்  தன்  தலையில்  ஹெல்மெட் (  தலைக்கவசம் )  அணிகிறான்.  Wiser ( நெற்றியில் )  Breast- plate,  Abdominal  guard,  Thigh  Pad,  Knee  pad,  Elbow  guard  என்பது  போல  அணுந்து  கொண்டு  புறப்படுகிறான்.  எதற்கு?  எதிரியின்  அம்பும்  வாளும்  தாக்காமல்  இருப்பதற்காக.  விபூதிக்கு  இதனால்  கவசம்  என்று  பேர்  வந்தது.
     ஒரு  காலத்தில்  வைணவர்களும்  திருநீற்றைத்தான்  அணிந்திருந்தார்கள்.  பகவத்  இராமானுஜர்தான்  திருமண்  இடும்  முறையை  அறிமுகப்படுத்தினார்.  ஆண்டுக்கு  ஒரு  நாள்  திருக்கண்ணமங்கையில்  ஒரு  முகூர்த்த  காலம்  பெருமாள்  திருமண்  காப்புக்குப்  பதிலாக  விபூதி  அணிகிறார்  என்று  சொன்னால்  உங்களுக்கு  வியப்பாக  இருக்கும்.  இந்தத்  தலம்  திருவாரூர்--  நாகப்பட்டினம்  இடையில்  இருக்கிறது.
-- டாக்டர்  நா. மகாலிங்கம்.
--அமுதசுரபி.  தீபாவளி  சிற்ப்பிதழ். 67ம்  ஆண்டு மலர்.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

No comments: