Sunday, May 21, 2017

F 015 சூப்பர் கார் !

   இந்த  வாரம்  உலகத்தில்  இருக்கும்  அத்தனை  கார்  பைத்தியங்களின்  பார்வையும்  ஜெர்மனியின்  மீதே  இருந்தது.  காரணம்,  சொகுசு  கார்  நிறுவனமான  மெர்சிடீஸ்  பென்ஸ்  F  015  என்னும்  சூப்பர்  காரை  ஜெர்மனியில்  அறிமுகப்படுத்தியதே  ஆகும்.  இந்த  காரின்  லேட்டஸ்ட்  டெக்னாலஜிகளை  பட்டியலிட்டால்  டெக்  மார்க்கெட்  தொடரே  பத்தாது  போல.  முதலில்  காருக்கு  பெட்ரோல்  தேவையில்லை.
     பேட்டரி  மூலமாகவும்,  ஹைட் ரஜன்  வாயு  மூலமாகவும்  ஓடக்கூடியது.  இப்படி  இரட்டை  எரிபொருள்  பயன்படுத்தப்படுவதால்  பேட்டரியின்  சார்ஜ்  இல்லாதபோது  வாயுவை  பயன்படுத்தியும்,  வாயு  தீர்ந்துவிட்டால்  பேட்டரியை  பயன்படுத்தியும்  மாறி  மாறி  தொடர்ந்து  ஓடுமாம்.  ஆயிரத்து  500  கி.மீ களுக்கு.  மேலும்,  ஆட்டோ  நேவிகேஷன்  முறைப்படி  கொஞ்சமும்  டென்ஷன்  இல்லாமல்  பேசிக்கொண்டே  பயணிக்கும்  வகையிலும்  டிசைன்  செய்யப்பட்டிருக்கிறது.
     காரின்  உட்புறம்  வித்தியாசமாய்,  வழக்கமான  கார்  சீட்  போல்  வெறும்  சாய்மானம்  மட்டும்  இல்லாமல்  காரின்  ஒவ்வொரு  சீட்டும்  180  டிகிரி  திரும்பும்  திறன்  கொண்டது.  இதனால்  நண்பர்களுடன்  ரம்மி  விளையாடிக்  கொண்டோ,  அலுவலக  மீட்டிங்கை  நடத்திக்  கொண்டோ  பயணம்  செய்யலாம்.  இதுபோக  3டி  கேமரா,  லேசர்  விளக்குகள்  என  ஏராளமான  ஹை-டெக்  செட்டப்புகள்  இருக்கும்.
--   ரவி  நாகராஜன்.  டெக்  மார்க்கெட்   சண்டெஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி  11-1 - 2015.         

No comments: