கோகோரா ஜி 1 - Gogo-ro G 1 என்னும் புது வகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தைவானில் அறிமுகமாகியுள்ளது. வண்டிகளுக்கே உரிய வெயிட் இல்லாமல் இலகுவாக தோற்றமளிக்கும் இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ வரை செல்ல முடியுமாம். அதுபோக இந்த வண்டியில் 30 சென்ஸார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இதை மொபைல் ஆப்ஸ் மூலம் கண்காணித்துக்கொண்டே இருக்கலாம். ஏதாவது பிரச்னை என்றால் இருந்த இடத்திலிருந்தே சர்வீஸ் சென் டரை கான்டாக்ட் செய்து குறையை சரி செய்து கொள்ளத்தான் இந்த வசதி.
புல் பேட்டரியும் சார்ஜ் ஆக ஆறு மணிநேரம் எடுக்கும். சாலைகளில் ஆங்காங்கே சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவவும் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக சிறு சந்தா கட்டினாலே போதுமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60கி.மீ ஆகும். இந்த வண்டி நம்மிடம் இருந்தால் செலவும் மிச்சம், மாசு பற்றி யோசிக்கவும் தேவையில்லை.
உபரித் தகவல், இதை வெயிலில் 12 மணி நேரத்துக்கு நிறுத்தினால் சூரிய ஒளி கொண்டே பேட்டரி புல்லாய் சார்ஜ் ஆகிவிடுமாம்.
-- ரவி நாகராஜன். டெக் மார்க்கெட் சண்டெஸ்பெஷல்.
-- தினமலர் திருச்சி 11-1 - 2015.

No comments:
Post a Comment