பூட்டுகளில் 6 லீவர், 7 லீவர் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அது எதைக் குறிக்கிறது தெரியுமா?
6 லீவர் பூட்டில் 6 தாழ்ப்பாள்களும், 7 லீவர் பூட்டில் 7 தாழ்ப்பாள்களும் இருக்கும். பூட்டின் உளமைப்புக்கு ஏற்ப சாவியிலுள்ள தாழ்ப்பாள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தாழ்ப்பாளைத் திறக்கும். ஒரே நேரத்தில் எல்லாத் தாழ்ப்பாள்களும் திறக்கப்பட்டு பூட்டு திறந்து கொள்ளும். இந்த வகைகளில் பொய் சாவி தயாரிப்பது கஷ்டம் என்பதால் இந்த ஏற்பாடு.
-- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.
ஒரு வித்தியாசம்
பட்டிமன்றம் ஒன்றில் கேட்டேன். "ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு என்ன தெரியுமா?" என்றவர், "ஆண் ஒரு காதில் காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுவான். ஆனால், ஒரு பெண் காது வழியாக வாங்கி வாய் வழியாக விட்டுவிடுவாள்" என்றார் பேச்சாளர். அவையில் ஒரே சிரிப்பலை.
-- பாலு, சென்னை.
புதைக்கப்பட்ட தங்கம்!
1987 டிசம்பர் 25ம் தேதி மாலை 4.10 மணிக்கு, மறைந்த எம்.ஜி.ஆரின். உடலை அடக்கம் செய்தபோது, பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் சொன்னார் : "மண்ணைத் தோண்டி தங்கத்தை எடுப்பார்கள். இங்கே மண்னைத் தோண்டி தங்கத்தைப் புதைக்கிறார்கள்".
-- அ.யாழினி பர்வதம், சென்னை- 78.
-- கல்கி இதழ். 14 டிசம்பர் 2014.
-- இதழ் உதவு : செல்லூர் கண்ணன்.

No comments:
Post a Comment