விலை எடை நிறுவனங்களின் உத்தி
எப்படி கண்டுபிடிப்பது?
வழக்கமாக 100 கிராம் சோப் என்று நினைத்து வாங்குவோம். 90 கிராம்தான் இருக்கும். 50 கிராம் பேஸ்ட் என்று நம்பி வாங்கினால் 40 கிராம்தான் பேக் செய்யப்பட்டிருக்கும். அதற்குத்தான் விலை குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு முன்பு 100 கிராமும், 50 கிராமும் என்ன விலையில் விற்பனை ஆனதோ அதே விலையில் தற்போது 40 கிராமும், 90 கிராமும் விற்பனை செய்யப்படுகிறது.
சோப்பு, பேஸ்ட், டீ தூள், பிஸ்கட் முதல் மசாலா பொருட்கள் வரை அனைதிலும் இந்த வகையிலான எடை குறைப்பு வித்தை சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதில் நிறுவன பேதமே கிடையாது. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கடைபிடிக்கின்றன.
ஏமாற்றும் உத்தியா?
விலை ஏற்றினால் வாடிக்கையாளரை இழக்கலாம் என நினைக்கும் நிறுவனங்கள் இந்த உத்தியை நேரடியாக நுகர்வோரிடத்தில் சொல்லலாமே என்கிற கேள்வி எழுகிறது. 50 காசு விலை குறைத்தால் பல லட்சம் செலவு செய்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் இந்த விஷயத்தை மட்டும் ஏன் இருட்டடிப்பு செய்கின்றன.
இருக்கும் ... ஆனா இருக்காது...
விலையும் ஏற்றக்கூடாது, லாபமும் குறையக்கூடாது, தரத்திலும் சறுக்கக்கூடாது, வாடிக்கையாளர்களையும் இழக்கக்கூடாது என்கிற பலமுனை யோசனைகளிலிருந்து நிறுவனங்கள் இந்த உத்தியை கடைப்பிடிக்கின்றன. பிஸ்கட்டின் வழக்கமான அளவைவிட சற்று சிறிய சைஸ் ஆக இருக்கிறது என்று தோன்றுகிறதா... இதுதான் அந்த இருக்கும்... ஆனா இருக்காது...
-- வணிக வீதி.
-- . 'தி இந்து' இணைப்பு. திங்கள், ஜனவரி 5, 2015.

No comments:
Post a Comment