உலகிலேயே அதிகமான உப்புத் தன்மை கொண்ட நீர்நிலை சாக்கடல். மற்ற கடல்களை விட 9.6 மடங்கு உப்பு இந்தச் சாக்கடலில் இருக்கிறது. அதனால் இங்கே மீன் போன்ற எந்த உயிரினங்களும் வாழ முடிவதில்லை. தண்ணீரின் அடர்த்தி அதிகம் என்பதால் மனிதர்கள் மிதந்துகொண்டே படிக்கலாம். மருத்துவக்குணம் மிக்கதாக நம்பப்படுவதால் இங்கே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம். ஆண்டுதோறும் இந்தச் சாக்கடலில் ஒரு மீட்டர் உயர்த்துக்குத் தண்ணீர் குறைந்து வருகிறது. 1950ம் ஆண்டிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 மீட்டர் அளவுக்குத் தண்ணீர் குறைந்துவிட்டது. ஜோர்டான் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைவதாலேயே சாக்கடலின் தண்ணீர் அளவு குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். சாக்கடலை ஒட்டிய பூங்காக்கள், நீர் விளையாட்டுகள் போன்றவை தண்ணீர் தொலைவுக்குச் சென்றுவிட்டதால் மூடப்பட்டிருக்கின்றன. +++ அதிசயமாக இருந்த சாகடல், கவலை தரும் விஷயமாக மாறிருச்சே...
-- உலக மசாலா. சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ் புதன், ஜனவரி 7, 2015.
-- உலக மசாலா. சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ் புதன், ஜனவரி 7, 2015.
No comments:
Post a Comment