Saturday, May 27, 2017

பொங்கலின் நாயகன்

*   சூரியனின்  நிறம்  என்ன?  --  வெள்ளை.  நமக்கு  அது  மஞ்சள்  போலத்  தோன்றுவதன்  காரணம்  பூமியின்  வளிமண்டலம்.
     சூரியக்  கதிரைப்  பலவிதமாக  சிதறடித்து  அனுப்புவதால்தான்.
*   கருவுற்ற  பெண்கள்  சூரிய  கிரகணத்தின்போது  வெளியில்  வரக்கூடாது  என்று கூறப்படுவதற்கு  காலகாலமாக  கூறப்படும்
     காரணம்  எது ?  --  பிறக்கும்  குழந்தைகளின்  உதடுகள்  கோணலாக  மடிந்திருக்கும் ( cleft  lips ).
*   இந்துமதப்  புராணங்களின்படி  சூரியவம்சத்தைச்  சேர்ந்த  மன்னன்  யார்?  --  மனு.  பகீரதன், இஷ்வாகு,  தசரதன்  ஆகிய
     நால்வருமே  சூரியவம்சத்தைச்  சேர்ந்தவர்கள்தான்.
*   எந்த  மாநிலத்தில்  சூரியனுகான  தனிப்பட்ட  ஆலயம்  இல்லை?  --  நான்கு  மாநிலங்களில்  சூரியனுக்கான  தனிப்பட்ட
    கோயில்கள்  உள்ளன.  தமிழ்நாட்டில்  சூரியனார்  ஆலயம்  கும்பகோணம்  அருகில்  உள்ளது.  குஜராத்தில்  மொதோராவிலும்,
    பீஹாரில்  கயாவிலும்,  ஒடிஸாவில்  கொனாரக்கிலும்  உள்ளன.
*   சூரியக்  கதிர்கள்  சராசரியாக  எவ்வளவு  நேரத்தில்  பூமியை  அடைகிறது?  --  8  நிமிடங்கள்.  மேலும்  துல்லியமாகச்
    சொல்வதென்றால்  8.3  நிமிடங்கள்.
*   மகாபாரதத்தில்  சூரியனின்  மகனான  கர்ணனின்  வளர்ப்புத்  தாய்  யார்?  --  தேரோட்டியான அதிரதனின்  மனைவியின்
    பெயர்  ராதா.  இவள்தான்  கர்ணனின்  வளர்ப்புத்  தாய்.  இதன்  காரணமாகத்தான்  கர்ணன்  ராதேயன்  என்றும்
    அழைக்கப்படுகிறான்.      
*   ஜெய,  விஜய,  அஜய,  ஜிதப்ராணா,  ஜிதாக்ரமா,  மனோஜயா,  ஜிதக்ரோதா  இவை  யார்  அல்லது  எவை ?  --  இவை
    குதிரைகள்.  பவிஷ்ய  புராணத்தின்படி  சூரியன்  செல்லும்  வாகனத்தில்  பூட்டப்பட்ட  ஏழு  குதிரைகளின்  பெயர்கள்  இவை.
    சூரியக்  கதிர்களை  இவை  குறியீடாகக்  கொண்டவை  என்பதுண்டு.
-- ஜி.எஸ். எஸ்.  வெற்றிக்கொடி.  இணைப்பு.
-- 'தி இந்து'  நாளிதழ்.  செவ்வாய்,  ஜனவரி  13, 2015.     

No comments: