Saturday, May 16, 2015

..டிப்ஸ்...

*  சாதாரண  பூட்டாக  இருந்தாலும்,  கதவிலேயே  பொருத்தப்பட்ட  பூட்டு  துவாரமாக  இருந்தாலும்,  சரியாகத்  திறந்து  மூட  முடியவில்லை  என்றால்,
   உங்களிடமுள்ள  சென்ட்  ( பெர்ஃப்யூம் )  பாட்டிலிலிருந்து கொஞ்சம்  திரவத்தை,  துவாரங்களில்  ஸ்பிரே  செய்யுங்கள்.  இனி  சுலபமாகத்  திறக்கலாம்.
*  எளிமையான  வடை  தயாரிக்கலாமா?  அரை  டம்ளர்  பயத்தம்பருப்பை,  பத்து  நிமிடங்கள்  ஊற  வையுங்கள்.  ஊறியபிறகு,  ஐந்தாறு  மிளகு,
   தேவையான  உப்பு  சேர்த்து,  கொரகொரவென்று  அரைத்து,  சின்னச்  சின்ன  வடையாகப்  பொரித்து  சூடாகப்  பரிமாறுங்கள்.  விருப்பப்பட்டால்...
   கறிவேப்பலை,  வெங்காயத்தையும்  வடை  மாவுடன்  சேர்த்துக்  கொள்ளலாம்.
*  மோர்க்குழம்பு  தயாரிக்கும்போது,  தேங்காய்,  பச்சை  மிளகாய்,  சீரகத்துடன்,  சிறிது  பச்சைக்  கடுகையும்  சேர்த்து  பால்  விட்டு  அரைத்துக்
   கொள்ளவும்.  மோர்க்குழம்பின்  சுவையும்,  மணமும்  அருமையாக  இருக்கும்.
*  பிரெட்  துண்டுகள்  காய்ந்து  அட்டை  போல  கெட்டியாக  இருக்கின்றனவா?  அவற்றைப்  பிய்த்து  மிக்ஸியில்  போட்டு,  கூடவே  பச்சை  மிளகாய்த்
   துண்டுகள்,  நறுக்கிய  வெங்காயம்,  கொஞ்சம்  உப்பு  ஆகியவற்றையும்  போட்டு  கொரகொரப்பாக  அரைத்து,  பிசைந்து  கொள்ளுங்கள்.  வாணலியில்
   எண்ணெய்  காய்ந்ததும்,  பக்கோடாக்களாகப்  பொரித்தெடுத்தால்... மொறுமொறுப்புடன்  மஞ்சூரியன்  போல  சுவையாக  இருக்கும்.
--- அவள் விகடன்.  18 -12 - 2012.                              
--  இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு.  (  கொல்லுமாங்குடி ).  

No comments: