இன்று 12.12.12. உலக அதிர்ஷ்ட தினம்! இனி ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரே வரும்.
ஆங்கில, தமிழ் மாதங்கள் 12. ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய புகழ் பெற்ற நாடகத்தில் ஒன்று, 12வது இரவு. தமிழ் வளர்த்த திருமுறைகள் 12. சிதம்பரம் சிவகாமி அம்மை பற்றிய பிள்ளைத்தமிழ் 12. கலிங்கத்து பரணியில் சக்தியின் வடிவம் 12. வராகி படிம அமைதியில் காணப்படும் வகைகள் 12. சூரியபகவான் தேரில் வர அவருக்கு முன்பாக சாமரம் வீசி வரும் அப்சரஸ்களின் எண்ணிக்கை 12. தேவிபாகவதத்தில் ஸ்ரீசக்கர கோட்டைக்கால் பித்தளை பிரகாரத்தில் அமைந்துள்ள சக்திகளின் எண்ணிக்கை 12. காளி தேவிக்கு ஏவல் செய்ய உடன் உள்ள யோகினிகளின் எண்ணிக்கை 12. குமரி மாவட்டத்தில் காணப்படும் அம்மன் கோயில்களின் எண்ணிக்கை 12. துவாதச ஆதித்யர்கள் சூரியனை 12 விதமாக வலம் வருகின்றனர்.
சூரியனது சக்கரத்தில் காணப்படும் ஆரக்கால்களின் எண்ணிக்கை 12. இது கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் கருங்கல் தேர் சக்கரத்தில் காணப்படுகிறது. சிற்ப கட்டடக் கலைக்கு புகழ் பெற்ற ஒடுஷா மாநிலம் கொணார்க் சூரியன் கோயிலில் காணப்படும் சக்கரங்களின் எண்ணிக்கை 12. கங்கைகொண்ட சோழபுரத்தை சோழ மண்டல தலைநகராக ராஜேந்திரசோழன் மாற்றியது 12ம் நூற்றாண்டு. நவக்கிரக ராசிகள் 12. இதுபோல இன்னும் பல சிறப்புகள் இன்றைய தேதிக்கு உள்ளன.
இதற்கு முன்பு நாம் கடந்துவந்த 10.10.10. 11. 11. 11. என்று முன்னோக்கியும், 12 மாதங்கள் மட்டுமே இருப்பதால் இனி வரும் ஆண்டுகள் 13.13.13. 14.14.14. என்று அமைய வாய்ப்பில்லை என்பதாலும் இன்றைய தேதி ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும் என்பது சிறப்புக்குரியது.
-- மோகன்ராஜ் பெருந்தச்சன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சிற்பக்துறை ஆராய்ச்சியாளர்.
-- தினமலர், 12.12.12.

No comments:
Post a Comment