தமிழ்க் கவிதை உலகில் குறை கூறுவது போல் பாராட்டும் மரபு உண்டு. அதை நிந்தாஸ்துதி என்று அழைப்பர். தமிழ்க் கடவுள் முருகனை கவிமணி நிந்தாஸ்துதி செய்து பாடியிருக்கும் கவிதை மிகவும் சுவையானது.
தந்தை மலையாளி தாய்மாமன் மாட்டிடையன்
வந்த ஒரு மச்சானும் வாணியனே சந்தமும்
விண் முகத்தை எட்டும் அயில் வேலேந்து
பன்னிருகைச் சண்முகத்திற்கு சாதியெதுதான்.
என்பது தான் அப்பாடல்.
கயிலைமலையிலே உள்ள சிவன், முருகனின் தந்தை. அவர் மலையிலே வாழ்வதால் மலையாளி என்றார் கவிமனி. திருமால் முருகனின் தாய்மாமன். மாடு மேய்த்த கண்ணன் திருமாலின் ஒன்பதாவது அவதாரம். அதனால் அவரை மாட்டிடையன் என்றார். திருமாலின் மகன் பிரம்மன். அதனால் அவர் மச்சான் ஆகிறார். அவர் கலைமகளான வாணியின் கணவர். இந்த அடிப்படையில் பிரம்மனை வாணியன் என்றார் கவிமணி. அதனால் முருகனே உன்னை என்ன சாதியில் சேர்ப்பது என்ற கேள்வியை கவிமணி நகைச்சுவையாக எழுப்புகிறார். இதுதான் நிந்தாஸ்துதி என்னும் குறை கூறுவது போல் பாராட்டும் மரபு. இதனை தமிழ் இலக்கனம் வஞ்சப்புகழ்ச்சி என்று கூறும்.
--- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல், நவம்பர் 16 - 30, 2012.

No comments:
Post a Comment