Friday, May 8, 2015

காசு பணம் துட்டு

*   ரூபாய்  நோட்டுகளின்  பின்பக்கத்தில் 15  மொழிகளில்  அதன்  மதிப்பு   அடுத்தடுத்து  குறிப்பிடப்பட்டிருக்கும்.  ரூபாய்
    நோட்டின்  மையப்  பகுதியில்  இந்தியிலும், பின்பக்கம்  ஆங்கிலத்திலும்  மொத்தம்  17  இந்திய  மொழிகளில்  மதிப்பு
    குறிப்பிடப்பட்டிருக்கும்.
*   நாம்  நினைப்பதற்கு  மாறாக  ரூபாய்  நோட்டுகள்  காகிதத்தால் ஆனவை  அல்ல.  இன்றைக்கு  நாம்  பயன்படுத்தும் ரூபாய்
    நோட்டுகள்  பருத்தி, பருத்தி  கழிவால்  உருவாக்கப்படுகின்றன.
*   மக்களின்  பொதுப்  புழக்கத்துக்காக  500 ரூபாய்  நோட்டுகள் 1987-ம்  ஆண்டும், 1000 ரூபாய்  நோட்டு  2000-ம்  ஆண்டும்
    வெளியிடப்பட்டன.*   75, 150, 1000  ரூபாயிலும்  நாணயங்கள்  இருக்கின்றன.  2010-ம்  ஆண்டில்  பல்வேறு
    நினைவுநாட்களைக்  கொண்டாட  மேற்கண்ட  மதிப்புகளில்  நாணயங்கள்  வெளியிடப்பட்டுள்ளன.  ஆனால், இவை
    பொதுப்பயன்பாட்டுக்கானவை  அல்ல. ரிசர்வ்  வங்கியின்  75-ம்  ஆண்டு விழா,  ரவீந்திரநாத்  தாகூரின்  150-வது  ஆண்டு
    விழா,  தஞ்சை  பிரகதீஸ்வரர் கோயிலின்  1000-வது  ஆண்டு  விழாக்களை  கொண்டாடும்  வகையில்  இந்த  நாணயங்கள்
    வெளியாயின.
*   2011-ம்  ஆண்டு  நாணயச்  சட்டத்தின்படி  1000 ரூபாய்  வரையிலான  மதிப்பில்  நாணயங்களை  வெளியிடலாம்.
    ஒவ்வொரு  ரூபாய்  நோட்டின்  இடது  கைப்பக்கத்தில்  தூக்கலாகச்  செதுக்கப்பட்ட ஏதாவது  ஒரு  வடிவம்  இருக்கும்.
    ஆயிரம்  ரூபாயில்  வைரம்,  500  ரூபாயில்  வட்டம், 100  ரூபாயில்   முக்கோணம்,  ரூ, 50ல்  சதுரம், ரூ.20-ல்  செவ்வகம்,
    ரூ.10-ல் எந்த  வடிவமும்  இருக்காது.  இந்த  வடிவங்களைத்  தடவிப்  பார்த்தே  பார்வையற்றவர்கள்  ரூபாயின்  மதிப்பை
    அறிகிறார்கள்.
*   நாசிக் ( மகாராஷ்டிரா), தேவாஸ் ( ம.பி ), மைசூர் ( கர்நாடகம் ),  சல்பானி ( மே.வ )  ஆகிய  4  இடங்களில்  ரூபாய்
    நோட்டுகள்  அச்சிடும்  அச்சகங்கள்  உள்ளன.
*   மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத்தில்  உள்ள  நாணயச்  சாலைகளில்  நாணயங்கள்  உருவாக்கப்படுகின்றன.
*   எந்த  நாணயச்  சாலையில்  நாணயம்  உருவாக்கப்படுகிறது  என்பதற்கு  அடையாளமாக  நாணயத்தில்  ஆண்டுக்குக்  கீழே
    டெல்லி  என்றால்  புள்ளி,  மும்பை  என்றால்  வைரம், ஹைதராபாத்  என்றால்  நட்சத்திரம், கொல்கத்தா  என்றால்  எந்த
    அடையாளமும்  இன்றி  இருக்கும்.
*   பயன்படுத்த  முடியாத  பழைய  ரூபாய்  நோட்டுகள்  என்ன  செய்யப்படுகின்றன  என்று  தெரியுமா? பயன்படுத்த  முடியாத
    நோட்டுகளை  வங்கிகளில்  கொடுத்துப்  புதிய  நோட்டுகளைப்  பெற்றுக்  கொள்ளலாம்.  அந்தப்  பழைய  ரூ. நோட்டுகளை
    ரிசர்வ்  வங்கி  சேகரித்து,  அவற்றை  துண்டு  துண்டாக்கி, பந்தைப்  போல  மாற்றி,  தேநீர்க்  குவளை  மூடிகள், பேப்பர்
    வெயிட்,  பேனா  ஸ்டாண்ட் , கீ  செயின்  போன்றவை  செய்யப்  பயன்படுத்துகிறது.
-- தொகுப்பு:  ஆதி.  ( மாயாபஜார் ).  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், மே 6, 2015.  

No comments: