ஆண்களின் மூளையைவிட, பெண்களின் மூளை அளவில் சிறிது குறைவாக இருப்பதினால், ஆண்களைவிட பெண்களுக்கு அறிவும் சிறிது குறைவு தானே?
மூளையின் அளவுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது. ' கனெக் ஷன் 'களின் வீரியம்தான் முக்கியம். புகழ்பெற்ற இலக்கிய மேதையான அனபோல் ப்ரான்ஸ் என்பவரின் மூளை சராசரி மனிதனின் மூளையைவிட ரொம்பச் சின்னது.(அவர் இறந்த பிறகு மூளையை எடை போட்டார்கள் ).
சராசரி மனிதனின் மூளை 1,400 கிராம். சராசரி பெண்ணின் மூளை 1,350 கிராம். அனபோலின் மூளை 1,017 கிராம். வாட்டசாட்டமாக வளர்ந்த ஒருமுட்டாளின் மூளையையும் சோதித்தார்கள். எடை 2,050 கிராம் இருந்தது. ஆகவே, பெரிய களிமண் உருண்டை வேறு. குட்டி வைரக்கல் வேறு!--ஹாய் மதன். கேள்வி -- பதில்.
-- ஆனந்த விகடன், 18 - 4 - 2012.